மனித உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்புகளில் பற்கள் மிக இன்றியமையாத ஒன்றாகும். அவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியமானது. ஆரோக்கியமற்ற பற்கள் மற்றும் ஈறுகள் ஆகியவற்றால் உணவு சாப்பிடுவதில் சிரமம் மற்றும் ஈறுகளுக்கு அருகே நோய்க்கிருமிகள் தங்குவதற்கான வாய்ப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்
உடலில் ஏற்படும் வலிகளில், பல் வலி மிகவும் மோசமானது என்ற சூழலில் நீங்கள் நாள்தோறும் ஆரோக்கியமான முறையில் பல் துலக்க வேண்டும் என்று பல் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பற்களின் முக்கியத்துவம் மற்றும் வாய் சுகாதாரம் குறித்து நடைபெறும் ஆலோசனைகள் மிகவும் குறைவு. இதுமட்டுமல்லாமல், ஞானப் பற்கள் என்று அழைக்கப்படும், வாயின் கடைசி பகுதியில் அமைந்துள்ள கடைவாய் பற்கள் குறித்து பொதுமக்களுக்கு அதிக தகவல்கள் தெரிவதில்லை.
உணவை சவைத்து, கூழாக்கி குடலுக்கு அனுப்பி வைப்பதில் கடைவாய் பற்களின் பங்கு முக்கியமானது. பொதுவாக ஒரு நபரின் அறிவைப் பொருத்து அவருக்கு ஞானப் பற்கள் (கடைவாய் பற்கள்) வளர்வதாக பலரும் நம்புகின்றனர், ஆனால், இதற்கும் உண்மைக்கும் வெகு தூரம் உள்ளது. ஒருவரது வாழ்வின் பிற்பகுதியில் அல்லது பதின்ம வயது அல்லது 20 வயதுகளின் தொடக்கத்தில் உங்களுக்கு ஞானம் பிறக்கிறது. அந்த சமயத்தில் இந்த பற்கள் வளர்வதால் அவை ஞானப் பற்கள் என்று கூறப்படுகிறது.
உங்கள் ஞானப்பல் பிடுங்கப்பட்டு விட்டால் அன்றைய நாள் முழுவதும் உங்கள் ஈறுகளில் ரத்தக் கசிவு இருக்கக்கூடும். பல மணி நேரத்திற்கு வீக்கம் இருக்கும் என்பதால் மருத்துவர்கள் உங்களை, அன்றைய நாள் முழுவதும் பல் துலக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள். அதுபோன்ற சமயங்களில் உப்பு கலந்த நீரை வைத்து வாய் கொப்பளிக்க வேண்டும்.