கிவி பழமானது தனித்துவமான சுவையை, இதில் சிறிய கருப்பு விதைகள் மற்றும் தெளிவற்ற பழுப்பு நிற தோலும் உண்ணக்கூடியவையாக இருக்கிறது. சிலர் கிவி பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு அந்த தோலை எடுத்துவிடுகிறார்கள். இது ஆண்டு முழுவதும் கடைகளில் எளிதில் கிடைக்கும்.கிவி பழம் கிட்டத்தட்ட 50 வகைகளை கொண்டுள்ளது.ஜூன் முதல் அக்டோபர் வரை, அவை நியூசிலாந்திலும்,நவம்பர் முதல் மே வரை கலிபோர்னியாவிலும் பெருமளவு பயிரிடப்படுகிறது.
நம்முடைய அன்றாட உணவு பட்டியலில் ‘கிவி’ பழத்தை சேர்ப்பதால் பல்வேறு நன்மைகள் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. கிவி பழம் பெரும்பாலும் பலரால் விரும்பப்படுவதில்லை என்றாலும் இதில் யாருக்கும் தெரியாத பல சத்துக்கள் உள்ளடக்கி இருக்கிறது.கிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் அதிகம் உள்ளது.
கொழுப்பை குறைக்க : கொழுப்பின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிவி. இது இரத்த உறைதலைத் தவிர்க்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ரத்த குழாய்களில் உள்ள கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆஸ்பிரின் மருந்து பெரும்பாலும் இருதய பிரச்சினைகளை தடுக்கும் மருந்தாக செயல்படுகிறது. இருப்பினும், இருதய மற்றும் ரத்த சம்பந்த நோய்கள் வராமல் இருக்க கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது.
செரிமானத்தை தூண்ட : கிவி செரிமானத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதில் ஃபைபர் தவிர, ஆக்டினிடின் என்ற நொதியைக் கொண்டுள்ளது. இது வயிற்றில் உள்ள உணவுகள் விரைவில் செரிமானமடைய உதவுகிறது. எனவே தான், அதிக உணவுக்குப் பிறகு ஒரு கிவியை உட்கொள்ளுங்கள் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே இறைச்சி சாப்பிட்ட பின்னர் ஒரு துண்டு கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது.
கண் பிரச்சனைகளுக்கு : பார்வை இழப்புக்கு காரணமான மாகுலர் (Macular) சிதைவிலிருந்து உங்கள் கண்களைப் பாதுகாக்க கிவி பழங்கள் உதவுகிறது. ‘தினமும் மூன்று வேளை கிவி பழங்களை உட்கொள்ளும்போது கண் சிதைவை 36 சதவீதம் அளவுக்கு குறைக்கிறது ’ என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கிவி பழத்தில் காணப்படும் அதிக அளவிலான ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் இந்த நன்மைக்கு பங்களிப்பதாக கருதப்படுகிறது.
டிஎன்ஏ பிரச்சனைகளுக்கு : உயிரணுக்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு நோயும் அல்லது உடல்நலப் பிரச்சினையும், அது சிறியதாக இருந்தாலும் அல்லது பெரியதாக இருந்தாலும் அது டிஎன்ஏவுடன் தொடர்புப்பட்டுள்ளது என்று கூறலாம். கிவி பழமானது டிஎன்ஏ பிரச்சனைகளை சரி செய்யும் திறன்களைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. தினமும் கிவி சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பைக் குறைத்து, புற்றுநோய் வராமல் இருப்பதையும் தடுக்கலாம் என்று சொல்கிறார் ஹோலிஸ்டிக் லைஃப்ஸ்டைல் பயிற்சியாளரான ‘லூக் குடின்ஹோ’ தெரிவித்துள்ளார்.
இதய நோயை தடுக்க : கிவி இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்கிறது. கிவிஸ் பழத்தை பற்றி 2014ல் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஒரு நாளைக்கு 3 கிவி சாப்பிடுவதால், டயஸ்டாலிக் மற்றும் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் குறைகிறது. கிவியில் லுடீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் சி உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.