Cause And Symptoms Of Abdominal Swelling : நாம் பல தருணங்களில் வயிறு உப்பியதை போலவோ அல்லது அடிவயிறு வீங்கியதை போலவோ உணர்ந்தால், அதை எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். உங்கள் வயிறு வீங்கி இருந்தால், வயிறு வழக்கத்தை விட பெரியதாக இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருந்தால் நம்மால் எந்த விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்த முடியாது. சில சமயங்களில் இதனால் கடுமையான வழியை கூட ஏற்படுத்தும்.
வயிறு வீக்கத்திற்கு, அஜீரணம், வாயு தொல்லை, குடல் புண், கர்ப்பம், அதிகமாக சாப்பிடுவது ஆகிய பல காரணங்கள் இருக்கும். இதில், வாயுத்தொல்லை மிகவும் பொதுவான காரணம். நாம் சாப்பிடும் உணவில் அதிக நார்ச்சத்து இருந்தால், இது அதிக வாயுவை உற்பத்தி செய்யும். இதனால் சில சமயங்களில் வாயு பிரச்சினை ஏற்படும். அதே சமயம் உங்கள் ஆதி வயிறு அடிக்கடி வீங்குவதுடன், வலியையும் உணர்ந்தால் நீங்கள் இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அடி வயிற்று வீக்கத்திற்கான காரணங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பால் பொருட்கள் : சிலருக்கு பால் பொருட்களை உட்கொண்ட பிறகு வயிறு கனமாக இருப்பதை போலவும், வீக்கம் மற்றும் வாயு பிரச்சினை ஏற்படும். பால் பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை உடலால் ஜீரணிக்க முடியாது என்பதே இதற்குக் காரணம். இதை அறிஞர்கள் லாக்டோஸ் சகிப்புத்தன்மை என்று அழைக்கின்றனர். இதனால், அஜீரணம், வாயு மற்றும் வயிற்று வலி ஆகியவை ஏற்படுகிறது.
பித்தப்பையில் கல் : பித்தப்பையில் கல் இருந்தாலும் அடி வயிற்றில் வீக்கம் ஏற்படும். அதே சமயம், கணையத்தில் வீக்கம் ஏற்பட்டாலும் அதன் தாக்கம் வயிற்றில் காணப்படும். இது தவிர, குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகம் இருப்பது, அதிகளவு பாட்டில்களில் விற்கப்படும் பானங்களை அருந்துவது, தைராய்டு குறைபாடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், எரிச்சல் கொண்ட குடல் நோய், உணவுகளை மென்று சாப்பிடாமல் இருப்பது, நெஞ்செரிச்சல், அதிக அமிலச்சுரப்பு மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை அதிகமாக சாப்பிடுவது போன்றவை வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும்.