கிராமங்களில் மட்டுமே அதிகம் கிடைக்கக் கூடிய இந்த ஆவாரம் பூக்களை நாட்டு மருந்து கடைகளிலும் வாங்கலாம். காய்ந்த பூக்களாகவும் கிடைக்கும் அல்லது பொடியாகவும் கிடைக்கும். காய்ந்த பூக்களை அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள் அல்லது அப்படியேவும் கொதிக்க வைக்கலாம். ஃபிரெஷான பூவாக கிடைத்தாலும் அதை காய வைத்து பயன்படுத்தலாம்.
ஆவாரம் பூ டீ போட முதலில் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள்.கொதி நிலைக்கு வரும்போது ஆவாரம் பூக்களை சேர்த்து கொதிக்க வையுங்கள். பின் அதை வடிகட்டி பருகலாம். தேவைப்பட்டால் அதில் மலைத்தேன் சேர்த்து குடிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.பொடியாக கிடைத்தாலும் அதை கொதிக்க வைத்தே வடிகட்டி பருகலாம்.