முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

வெயிட் லாஸ் முயற்சியில் இருக்கும் ஒருசிலர் உணவுகளை குறைத்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் நினைப்பதற்கு மாறாக இந்த பழக்கம் அவர்களது எடை குறைப்பு பயணத்தை தொந்தரவு செய்யலாம்.

 • 111

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் நமக்கு தெரிந்தவை, ஆனால் நம் உடலுக்கு தேவையானதை விட குறைவாக சாப்பிடுவதாலும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆம், பசி இல்லாததன் காரணமாகவோ அல்லது உணவு கட்டுப்பாடு காரணமாகவோ குறைவாக சாப்பிடுவது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?

  MORE
  GALLERIES

 • 211

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  ஒருவருக்கு இருக்கும் குறைவாக சாப்பிடும் பழக்கம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரி அளவில் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. வெயிட் லாஸ் முயற்சியில் இருக்கும் ஒருசிலர் உணவுகளை குறைத்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் நினைப்பதற்கு மாறாக இந்த பழக்கம் அவர்களது எடை குறைப்பு பயணத்தை தொந்தரவு செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 311

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  பிரபல ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பாத்ரா தனது சமீபத்திய இன்ஸ்டா பதிவில், ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பாத்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், மிதமான எடையை அடைவதும் பராமரிப்பதும் சவாலான விஷயம். எடையை குறைப்பின் போது பலரும் இலக்கை அடைய இயல்பாகவே உணவை குறைத்து கொள்கிறார்கள். இருப்பினும் போதுமான கலோரிகளை எடுக்காதது சில சிக்கல்களை ஏற்படுத்த கூடும் என்கிறார். நீங்கள் உங்கள் உடலுக்கு போதுமான அளவு சாப்பிடவில்லை என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இங்கே...

  MORE
  GALLERIES

 • 411

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  குறைவான எனர்ஜி லெவல் : உணவை குறைப்பதால் இயல்பாகவே ஒருவர் எடுத்து கொள்ளும் கலோரி அளவும் குறைகிறது. மிக குறைவான அளவு கலோரிகளை மட்டுமே தொடர்ந்து எடுப்பது அடிப்படை செயல்பாடுகளை தவிர உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளுக்கு தேவையான போதிய ஆற்றல் கிடைக்காது. இறுதியில் இது சோர்வுக்கு வழிவகுக்கும்.

  MORE
  GALLERIES

 • 511

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  முடி உதிர்வு : கலோரிகள், புரதம் மற்றும் சில மைக்ரோநியூட்ரியன்ட்ஸ் சத்துக்களை போதுமான அளவு எடுத்து கொள்ளாமல் தவற விடுவதால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம்.

  MORE
  GALLERIES

 • 611

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  தொடர் பசி : குறைவான உணவை தொடர்ந்து உட்கொள்வது உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக போதுமான கலோரி மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளலை ஈடுசெய்யும் பொருட்டு பசியை அதிகரிக்கும். இதனால் எப்போது பார்த்தாலும் பசித்து கொண்டே இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 711

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  தூக்கத்தில் சிக்கல் : தூங்குவதற்கு அதிக நேரம் ஆவது மற்றும் குறைந்த நேரமே ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போன்ற தூக்க பிரச்சனைகள் குறைவாக சாப்பிடுவதால் ஏற்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 811

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  எரிச்சல் : நீண்ட நாட்கள் குறைந்த கலோரி எடுத்து கொள்வது மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறைகள் எரிச்சலான மனநிலையுடன் தொடர்புடையவை.

  MORE
  GALLERIES

 • 911

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  எப்போதுமே குளிர்ச்சியாக உணர்வது : உணவை குறைவாக சாப்பிடுவதன் மூலம் மிக குறைந்த கலோரிகளை தொடர்ச்சியாக எடுப்பது உடல் வெப்பநிலை குறைய வழிவகுக்கும், இதனால் பெரும்பாலான நேரங்களில் உடல் குளிர்ச்சியாக இருப்பதை போன்ற உணர்வு இருக்கும். இதற்கு T3 தைராய்டு ஹார்மோனின் குறைந்த அளவு காரணமாக இருக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 1011

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  மலச்சிக்கல் : டயட்டை ஸ்ட்ரிக்டாக பின்பற்றுவது மற்றும் உணவை குறைவாக சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்பட வழிவகுக்கலாம். ஒரு நபர் குறைவாக சாப்பிடும் போது, ​​அவரது உடலில் மலமாக மாற்றுவதற்கு குறைவான உணவே இருக்கும். இது மலச்சிக்கலை ஏற்படுத்தும். தவிர செரிமான பாதை வழியாக உணவின் மெதுவான இயக்கம் (Slower movement) காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 1111

  நீங்கள் தினமும் போதுமான அளவு சாப்பிடுவதில்லை.. இன்னும் சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்.!

  மோசமான உற்பத்தித்திறன் : போதுமான அளவு உணவு எடுத்து கொள்ளாமல் குறைவான அளவு சாப்பிடுவதால் பி-வைட்டமின்ஸ், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஃபோலேட்ஸ் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்காது. இதனால் மூளையின் செயல்பாடு, அறிவாற்றல் மற்றும் உற்பத்தி திறன் குறையும். குறைவாக சாப்பிடுவது கடுமையான அல்லது நாள்பட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே எடைக்குறைப்பு முயற்ச்சியில் இருப்பவர்கள் சமச்சீரான டயட்டை பின்பற்ற வேண்டும்.

  MORE
  GALLERIES