நடைப் பயிற்சி என்பது பொதுவாக பலரும் செய்யக் கூடிய உடற்பயிற்சியாக இருக்கிறது. எளிமையான முறையில் அதேசமயம் காசே செலவில்லாமல் உடல் எடையைக் குறைக்க இதுவும் ஒரு நல்ல பயிற்சிதான். இந்த நடைப்பயிற்சியில் பல வகைகள் உண்டு. அதில் ஒரு வகைதான் எட்டு வடிவில் நடப்பது. ஆம்..எப்படி ஓட்டுநர் உரிமம் வாங்க வளைந்து வளைந்து எட்டு போடுவோமோ அதேபோல்தான் கொழுப்பைக் குறைக்க எட்டு ஷேப்பில் வளைந்து வளைந்து நடக்க உடல் எடை குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எப்படி என்று பார்க்கலாம்.