வாழைப்பழம் எல்லா சீசன்களிலும் எளிமையாக கிடைக்கும் பழங்களில் ஒன்று. இதில், வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும். எனவே தான், உச்சி முதல் பாதம் வரை உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் வாழைப்பழம் சிறந்த தீர்வாக உள்ளது. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் நிறைந்த வாழைப்பழம் கொண்டு, சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் காக்க உதவும் சில எளிய மாஸ்குகளை தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.
முகத்தில் உள்ள பருக்கள் நீங்க : கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இயல்பான காலநிலையை விட கோடை காலத்தில் சருமங்களை அதிகமாக கவனிக்க வேண்டும். அனைவரும் இயல்பாக எதிர்கொள்ளும் சரும பிரச்சனைகளில் ஒன்று முகப்பரு. முகத்தில் உள்ள பருக்கள் குறைய, அரை கப் தயிருடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்றை சேர்த்து மசித்து, முகத்திற்கு பயன்படுத்தி வர, சருமத்தில் காணப்படும் பருக்களை குறைக்க உதவுகிறது.
எண்ணெய் பசை நீங்க : இளைஞர்கள் அதிகமாக எதிர்கொள்ளும் சரும பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் எண்ணெய் வடிதல். இதை கட்டுப்படுத்த நாம் பல விஷயங்களை முயற்சித்திருப்போம். ஆனால், இதற்க்கு வாழைப்பழம் சிறந்த தீர்வாக இருக்கும். நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்றுடன் எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் சேர்த்து குழைத்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ நல்ல மாற்றம் தெரியும்.
முடி உதிர்வை கட்டுப்படுத்த : இந்த உலகில் முடி பிரச்சனை அல்லாதவர்களை பார்ப்பது கடினம். ஏனென்றால், 99.2 சதவீத மக்களுக்கு தலைமுடி பிரச்சனை இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. முடி உதிர்வை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் சிறந்தது. முடி உதிர்வை தடுக்க, நன்கு பழுத்த வாழைப்பழம் ஒன்றை நன்றாக மசித்துக்கொள்ளவும், பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குழைத்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர, தலைமுடி சேதம் மற்றும் தலைமுடி வெடிப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.