நன்கு சமநிலையான லைஃப்ஸ்டைல் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியமானது. ஆரோக்கிய பழக்கங்களை பின்பற்றுவது உடல்நலனை பேணி காப்பதற்கு உதவுகிறது. இவை தெரிந்தும் பணிச்சுமை காரணமாக பெரும்பாலான ஆண்கள் உணவு முறைகளில் கவனம் செலுத்த தவறுகின்றனர். தேவையற்ற ஜங்க் ஃபுட்ஸ்களை தின்று தங்கள் வேலையை தொடர்கின்றனர். புத்தாண்டு துவங்கி உள்ள நிலையில் ஆரோக்கியமாக இருக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய அதே சமயம் சிறந்த உணவுப் பழக்கங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
ஊற வைத்த நட்ஸ்களுடன் நாளை துவக்குங்கள்: நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட காலையில் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். காலை எழுந்ததும் சூடாக காஃபி, டீ பருகும் பழக்கத்தை மாற்றி, இரவு தண்ணீரில் ஊற வைத்த நட்ஸ்கள் மற்றும் பாதாம், திராட்சை, அக்ரூட் வால்நட்ஸ் மற்றும் பிற சத்தான உலர் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இவை கால்சியம், புரதம், ஜிங்க் மற்றும் இரும்பு ஆகியவற்றின் வளமான ஆதாரமாக இருப்பதால் காலையிலேயே உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். எனவே ஒரு கையளவு நட்ஸ்களை இரவே ஊற வைத்து விட்டு, காலை எழுந்ததும் அவற்றை சாப்பிடுங்கள்.
மதிய உணவிற்கு... மதிய உணவிற்கு பலர் பர்கர் மற்றும் பீட்சா சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இது தவறான பழக்கம். மதிய நேரத்தில் கீரைகள், காய்கறிகள், கோழி, முட்டை அல்லது மீன் உள்ளிட்ட சத்தான பொருட்களை டயட்டில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்தை உறுதி செய்யும். அதே போல வறுத்த உணவுகளுக்கு பதில் சால்ட்களை சாப்பிடலாம். கீரை, ப்ரோக்கோலி உள்ளிட்ட சத்தான பொருட்களுடன் கூடிய பச்சை காய்கறிகளின் சால்ட்ஸ்களில் புரோட்டீன் தவிர பல சத்துக்கள் நினைந்துள்ளன. எனவே உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் அல்லது இறைச்சிகளுக்கு ஏற்ப டயட்டை மாற்றி கொள்ளுங்கள்.
டிடாக்ஸ் ட்ரிங்ஸ்: டிடாக்ஸ் பானங்கள் நல்ல சுவை மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கின்றன. எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் வெள்ளரி உள்ளிட்டவற்றை சில பீஸ்களாக வெட்டி ஒரு கிளாஸ் ஜாரில் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி அலுவலகம் செல்லும் போது கையோடு எடுத்து செல்லுங்கள். இந்த பானத்தில் புதினா அல்லது துளசி இலைகளையும் சேர்த்து கொள்ளலாம். நாள் முழுவதும் அவ்வப்போது இந்த பானத்தை சிறிது சிறிதாக பருகுவது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற, எடையை பராமரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
ஆரோக்கிய ஸ்னாக்ஸ்: அலுவலகத்தில் இருக்கும் போது மதிய உணவிற்கு முன் அல்லது மதிய உணவிற்கு பின் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று தோன்றுவது இயல்பு தான். அதற்காக ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், சமோசா, பஜ்ஜி, போண்டா என ஆயில் ஐட்டமாக தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. சப்போட்டா, ஆப்பிள்,கொய்யாப்பழங்கள், அவகோடா அல்லது ஃப்ரூட் சாலட்ஸ்கள் நல்ல ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்களாகும்.
ஸ்மூத்திஸ்: பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீர், பானங்கள், ஜூஸ்கள் உள்ளிட்டவற்றுக்கு நோ சொல்லி விட்டு, ஒவ்வொரு நாளும் விதவிதமான ஸ்மூத்திஸ்களை வீட்டிலேயே தயார் செய்து அலுவலக நேரத்தில் பருகுவது ஆரோக்கியமான ஒரு பழக்கம் ஆகும். காலை உணவுக்கு பதிலாக ஸ்மூத்திஸ் எடுத்து கொள்ளலாம். வாழைப்பழம், சுரைக்காய், வெள்ளரி, அவகேடோ என உங்களுக்கு பிடித்த எந்த பழம் அல்லது காய்கறிகளை கொண்டும் ஸ்மூத்தி செய்யலாம். ஸ்மூத்திஸ் குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி மற்றும் ஆற்றலுடனும் இருக்கும்.
இரவு உணவு: வேளைக்கு அவசரமாக ஓடுவது மற்றும் வேலைப்பளு காரணமாக காலை மற்றும் மதியம் சரியாக சாப்பிட முடியாமல் போவதால், சிலர் இரவு ஹெவியாக சாப்பிடுவார்கள். நீங்கள் இதில் ஒருவர் என்றால் பழக்கத்தை மாற்றி கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை இரவில் தவிர்த்து கிச்சடி, பருப்பு சூப் மற்றும் வதக்கிய காய்கறிகளுடன் பிளெயின் ரொட்டி போன்ற லைட்டான உணவை இரவில் சாப்பிடலாம். புரோட்டின் மற்றும் ஃபைபர் நிறைந்த உணவுகளை இரவில் எடுப்பது நல்லது.