கர்ப்ப காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறப்பான தருணம். அந்த காலத்தில் கர்ப்பிணிகள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியதும் அவசியம். அதுவும் கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக்கொள்ளும் பானங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். காரணம், கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளும் உணவு அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அப்படி கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய சில பானங்கள் குறித்து இங்கே காணலாம்.
பதப்படுத்தப்பட்ட பழச்சாறு : கர்ப்ப காலத்தின் போது பெண்கள், புதிய (fresh) பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கடையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளை எடுத்துக்கொள்ள கூடாது. அவை, பாட்டில்களில் நீண்ட நாள் கெடாமல் இருக்க அதில் அமிலங்கள் கலக்க பட்டிருக்கும். இவை கருவில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியமானது அல்ல.