முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

பொதுவாக எல்லா சமயத்திலும் மாதவிலக்கு தாமதத்தை கர்ப்பத்தோடு மட்டும் ஒப்பிட்டு விட முடியாது. இல்லற வாழ்க்கையை தொடங்காத இளம் பெண்கள், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கும் கூட மாதவிலக்கு தாமதப் பிரச்சினை ஏற்படுகிறது.

  • 19

    மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

    மாதவிலக்கு தள்ளி போவது எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய விஷயம் ஆகும். குறிப்பாக, நீங்கள் தற்போது குழந்தை வேண்டாம் என்ற முடிவுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர் என்றால், மாதவிலக்கு தாமதமாகுவது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 29

    மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

    ஆனால், பொதுவாக எல்லா சமயத்திலும் மாதவிலக்கு தாமதத்தை கர்ப்பத்தோடு மட்டும் ஒப்பிட்டு விட முடியாது. இல்லற வாழ்க்கையை தொடங்காத இளம் பெண்கள், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண்களுக்கும் கூட மாதவிலக்கு தாமதப் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு பொதுவான பல காரணங்கள் இருக்கின்றன. வாழ்வியல் பழக்க, வழக்கங்கள், மன அழுத்தம், பிற உடல்நல பிரச்சினைகள் என பல காரணங்களால் மாதவிலக்கு தாமதமாகிறது. அவை என்னவென்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 39

    மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

    மிக அதிகமாக உடற்பயிற்சி செய்வது : நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தினசரி உடற்பயிற்சி என்பது அவசியமானது தான். நீண்ட கால நோய்களை எதிர்கொள்ளவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும், மன நலன் மேம்படவும் உடற்பயிற்சிகள் உதவிகரமாக இருக்கின்றன. எனினும், திடீரென நீங்கள் அதிகப்படியான உடற்பயிற்சிகளை செய்யும்போது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைந்து, அதன் காரணமாக மாதவிலக்கு தள்ளிப் போகிறது. அதே சமயம் ஒன்று அல்லது இரண்டு மணி நேர உடற்பயிற்சி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 49

    மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

    மன அழுத்தம் : மன அழுத்தம் என்பது இயற்கையான ஒன்று. ஆனால், இதுவே உங்களுக்கு நீண்டகாலமாக இருக்கிறது என்றால், நிச்சயமாக மாதவிலக்கு சுழற்சியை பாதிக்கும். மன அழுத்தத்தில் இருக்கும் போது உடலில் கோர்டிஸால் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. இது மாதவிலக்கு தள்ளிப் போக அல்லது குறைவானதாக இருக்க காரணமாகும்.

    MORE
    GALLERIES

  • 59

    மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

    உடல் எடை மாற்றங்கள்: உங்கள் உடல் எடை மாறும்போது அதன் காரணமாகவும் மாதவிலக்கு சுழற்சி பாதிக்கப்படும். அதிகப்படியான உடல் பருமன் அல்லது உடல் எடை குறைவு அல்லது திடீர் ஏற்ற, இறக்கங்கள் போன்றவை காரணமாக மாதவிலக்கு தாமதம் அடையும்.

    MORE
    GALLERIES

  • 69

    மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

    தாய்ப்பால் ஊட்டுவது : குழந்தையை பெற்றெடுத்த பிறகு, தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் மாதவிலக்கு லேசானதாக இருக்கலாம் அல்லது தள்ளிப் போகலாம். பாலூட்டும் காலங்களில் மாதவிலக்கு தவறுவது என்பது முற்றிலும் இயல்பான விஷயம் தான். அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதே சமயம், பாலூட்டும் காலங்களில் நீங்கள் இல்லற வாழ்வில் ஈடுபட்டால், மாதவிலக்கு தவறுவதை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 79

    மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

    பொதுவான உடல்நலக் கோளாறுகள் : தைராய்டு கோளாறுகள், கல்லீரல் செயல்பாட்டின் குறைபாடு, நீரிழிவு போன்ற உடல்நல பிரச்சினைகள் காரணமாக மாதவிலக்கு தாமதம் ஏற்படலாம், மருத்துவரை அணுகி இதற்கு ஆலோசனை பெற வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 89

    மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

    சில மருந்துகள் : தைராய்டு மருந்துகள், ஹீமோதெரெஃபி மருந்துகள், ஆண்டி சைகோடிக்ஸ், ஆண்டி டெப்ரெசெண்ட்ஸ் போன்ற மருந்துகள் காரணமாக மாதவிலக்கு தாமதம் ஆகலாம் அல்லது தவறிப் போகலாம்.

    MORE
    GALLERIES

  • 99

    மாதவிலக்கு தள்ளிப்போனால் கர்ப்பம் மட்டும் காரணமல்ல... இந்த பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்..!

    முன்கூட்டியே மோனோபாஸ் அடைவது : பொதுவாக பெண்கள் 50 வயதை எட்டும்போது மோனோபாஸ் என்னும் மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும் நிலையை எட்டுவார்கள். அதற்கு முன்னதாக பிரிமோனோபாஸ் ஏற்படக் கூடும். அதாவது அவ்வபோது மாதவிலக்கு ஏற்படுவது அல்லது மிக தாமதமாக மாதவிலக்கு அடைவது போன்றவை நிகழும்.

    MORE
    GALLERIES