கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு ஒரு தவம் போன்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என அறிவுறுத்துவதைப் போலவே, கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எதை எல்லாம் சாப்பிட வேண்டும், எவற்றையெல்லாம் கட்டாயம் சாப்பிடக்கூடாது என்ற பட்டியலும் உள்ளது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு என்றுமே பிடிக்காத உணவை கூட சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும், ஆனால் அதில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது கட்டாயமாகிறது.
1. மீன்கள் மற்றும் கடல் உணவுகள்: பெரிய சைஸ் மீன்களில் அதிக அளவில் மெர்குரி எனப்படும் பாதரசம் உள்ளது. இவை வளரும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்பதால் கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் உடலில் அதிக அளவில் பாதரசம் சேருவது மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை பாதிக்கும். டூனா, சுறா, வாள்மீன், வாலி, மார்லின் போன்ற மீன்களை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்கவும்.
2. கத்தரிக்காய்: கர்ப்பிணி பெண்கள் பலருக்கும் கத்தரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாக கூட இருக்கலாம். ஆனால், இதனால் பெண்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்படலாம். எனவே கர்ப்பிணி பெண்கள் கத்திரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் இது அமினோரியா மற்றும் மாதவிடாய்க்கு முந்தைய கோளாறுக்கு சிகிச்சையளிக்க பயன்படக்கூடியது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
6. வெந்தயம்: இந்தியர்களின் பெரும்பாலான உணவுகளில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வெந்தயம் கருச்சிதைவை தூண்டும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும். இவை கர்ப்பபையில் வலுவான சுருக்கங்களைத் தூண்டக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் குறை பிரசவம், கருக்கலைப்பு ஆகியவை ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் சில மருந்துக்கள் வெந்தயத்துடன் எதிர்வினையாற்றக்கூடியவை எனக்கூறப்படுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் வெந்தயம் எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
காபி: காஃபைன் என்ற மூலப்பொருள் அடங்கிய காபியை அதிக அளவில் உட்கொள்ளல் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 200 மி.கி என்ற அளவில் கஃபைன் உட்கொள்வது பாதுகாப்பானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதையும் மீறி குடிப்பது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் ஆபத்தானது. மேலும், காஃபி போன்ற கஃபைன் பானங்கள் டையூரிடிக்ஸ் மற்றும் உடலின் நீர்ச்சத்தைக் குறைக்க காரணமாகின்றன. இதனால் நீங்கள் நீரிழப்பு அடையலாம். நீர் இழப்புடன், கால்சியம் போன்ற சில முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உடலில் இருந்து வெளியேற்றப்படலாம்.