உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மற்றும் ரத்தம் சப்ளை செய்வதற்கு இதயம் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மட்டுமே நீங்கள் நீண்ட காலத்திற்கு நோயற்ற வாழ்க்கை நடத்த முடியும். சத்தான உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இதய நலனிற்கு அவசியமான ஒன்றாகும்.
நாள் முழுவதும் அமர்ந்து பணி செய்வது : பணி நிமித்தமாக நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாய தேவை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் அல்லது எங்குமே செல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பொழுது கழிப்பது உங்களுக்கு விருப்பமான தேர்வாக இருக்கலாம். அடிக்கடி எழுந்து உடலை இயக்காமல், சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்பவர்களுக்கு இதய பாதிப்புகள் வரக்கூடும் என்று அமெரிக்க இதய நலச் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடங்களாவது நீங்கள் நடந்து செல்ல வேண்டும்.
போதிய பல் சுத்தம் இல்லாமல் இருப்பது : பற்களுக்கு இடையே சிக்கிக் கொள்ளும் உணவுகளை முறையாக சுத்தம் செய்வது அவசியமாகும். பல் சுத்தம் செய்யவில்லை என்றால் ஈறுகள் வீக்கம் மற்றும் பற்சிதைவு (பூச்சிப்பல்) போன்ற பிரச்சினைகள் மட்டுமல்லாமல் இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களும் வரக் கூடும். ஏனென்றால், ஈறுகளை பாதிக்கக் கூடிய அதே பாக்டீரியாக்கள், உடலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. ஆகிய பற்களுக்கு இடையே உள்ள பாக்டீரியாவை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
மகிழ்ச்சியற்ற உறவு : கணவன், மனைவி, காதலர்கள் இடையே மகிழ்ச்சி இல்லாமல் ஒருவித அதிருப்தியுடன் வாழ்க்கை நடத்துவது என்பது இதய ரீதியிலான பிரச்சினைகளை கொண்டு வரும். மன அழுத்தம் அதிகரிக்கவும், சத்தான உணவு மீதான உங்கள் கவனத்தை சிதறடிக்கவும் இது காரணமாக அமையும். இதன் எதிரொலியாக இதய நோய்களுக்கான அபாயம் அதிகரிக்கும்.