மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படும் பலரை நம்மால் இன்று காண முடிகிறது. ஆண் பெண் வித்தியாசம் இன்றி இளம் வயது முதல் பெரியவர்கள் வரை பலரும் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் நம்முடைய மூட்டுகளில் உள்ள ஜவ்வின் உதவியுடன் தான் நம்மால் அவற்றை எளிதாக நீட்டவும் மடிக்கவும். முடிகிறது. மூட்டுகளில் உள்ள தசை நார்களில் பிரச்சனை, சுளுக்கு, மற்றும் மூட்டுகளில் எலும்புகளில் பிரச்சினை ஏற்படும் போது அவை மூட்டுகளை பலவீனமாக்குவதுடன் வலியையும் உண்டாக்குகிறது.
மூட்டுகளில் உள்ள ஜவ்வு சேதமடையும் போது மூட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக ஊராய துவங்குகின்றன. இதன் காரணமாக மூட்டுக்களில் உள்ள எலும்பு வெளிப்பக்கம் நோக்கி வளர ஆரம்பிக்கிறது. இது மிகக் கடுமையான வலியை உண்டாக்கும். எனவே சரியான இடைவெளியில் மூட்டுகளில் உள்ள பிரச்சனையை கண்டறிந்து சரி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் வரக்கூடிய பல பாதிப்புகளை நம்மால் தவிர்க்க முடியும். மூட்டுக்களில் பிரச்சனை இருப்பின் சில அறிகுறிகளை வைத்து எளிதாக கண்டு கொள்ளலாம்.
கடுமையான வலி : மூட்டு இணைப்புகளில் பல நாட்களுக்கு வலி அதிகமாக இருந்தால் உங்களது மூட்டுகளில் ஏதோ பிரச்சனை என நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இந்த வலியானது சில நாட்களோ சில மாதங்களும் அல்லது சில வருடங்களுக்கு கூட நீடித்து இருக்கும். சில நேரங்களில் மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு இடுப்பில் ஏற்படும் காயங்கள் கூட காரணமாக இருக்கும்.
பலவீனமான தசைகள் : நீங்கள் சரிவர உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும், உடல் இயக்கங்களை சரியாக மேற்கொள்ளாமல் இருந்தாலும் உங்களது தசைகள் சிறிது சிறிதாக வலிமையை இழக்க நேரிடும். மூட்டுகளில் இயக்கங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் குவாட்ரைசப்ஸ், ஹேம்ஸ்ட்ரிங்க்ஸ், கேச்ஸ்ட்ரோநிமியஸ் என்ற தசைகள் பலவீனம் அடைந்து விடும். இதன் காரணமாக மூட்டு இணைப்புகள் பலவீனமாகவும், கடுமையான வலியை உண்டாக்க கூடியதாகவும் இருக்கும்.
கால்களை நீட்ட முடியாமல் போவது : கால்களை நன்றாக நீட்டி அமர முயற்சிக்கும்போது முட்டுக்கள் ஒத்துழைக்காமல் அல்லது கடுமையான வலியையும் உண்டாக்கினால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதனை ஆஸ்டியோஆர்த்ரடிஸ் என அழைப்பார்கள். தங்களது இளம் வயதில் கால்களுக்கும், மூட்டுகளுக்கும் அதிகப்படியான வேலையை கொடுத்த நபர்களுக்கு இந்த பிரச்சனை உண்டாகிறது.