முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

ரத்தம் தோய்ந்தது போன்ற சிவப்பு நிற கண்களின் தோற்றம் பயமுறுத்துவதோடு அதை எதிர்கொள்பவருக்கு பெரும்பாலும் ஒரு கடுமையான அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்த கூடும்.

 • 110

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  நம்முடைய கண்கள் உண்மையிலேயே இயற்கையின் அதிசயமாக இருக்கின்றன. நாம் வாழ்ந்து வரும் பூமியின் அழகை காண, சக மனிதர்கள் மற்றும் உயிர்கள் என சகலத்தையும் காண கண்களை ஒழுங்காக பராமரிப்பது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 210

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  கண்களில் ஏதேனும் அசௌகரியங்கள் மற்றும் சிக்கல்களை தடுக்க அவற்றை கவனித்து கொண்டாலும் கூட, ரத்த நிறத்தில் கண்கள் சிவப்பது என்பது பலருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்பட கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

  MORE
  GALLERIES

 • 310

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  ரத்தம் தோய்ந்தது போன்ற சிவப்பு நிற கண்களின் தோற்றம் பயமுறுத்துவதோடு அதை எதிர்கொள்பவருக்கு பெரும்பாலும் ஒரு கடுமையான அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்த கூடும். எரிச்சலோடு சேர்ந்து கண்கள் சிவப்பாக மாறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அலர்ஜி, சோர்வு, சோர்வு மற்றும் நோய்த் தொற்றுகள் உள்ளிட்டவை மிகவும் பொதுவானவை.

  MORE
  GALLERIES

 • 410

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  நீங்கள் அடிக்கடி எரிச்சலோடு சேர்த்து கண்கள் சிவந்து போகும் பிரச்சனையை சந்திக்கிறீர்கள் என்றால் கண்கள் சோர்வை, அவஸ்தையை மற்றும் சிவந்து போகும் பிரச்சனையை குறைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் இங்கே...

  MORE
  GALLERIES

 • 510

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  கோல்ட் கம்ப்ரஸ் (Cold Compress): கண்கள் சிவந்து போகும் பிரச்சனைக்கு எளிய தீர்வு பாதிக்கப்பட்ட கண்களுக்கு கோல்ட் கம்ப்ரஸ் முறையை பயன்படுத்துவது ஆகும். கோல்ட் கம்ப்ரஸ் என்றால் எந்த வகையிலாவது குளிர்ந்த நீரை கொண்டு கண்களுக்கு ஒத்தடம் கொடுப்பதே. இதற்கு நீங்கள் சுத்தமாக இருக்கும் துவைத்த டவல் அல்லது துண்டை குளிர்ந்த நீரில் நனைத்து, கண்களை மூடி சுமார் 10 - 15 நிமிடங்கள் மெதுவாக ஒத்தடம் கொடுக்கவும். இல்லை என்றால் கண்களை மூடி கண்களுக்கு மேலே ஈர துணியை போட்டு சிறிது நேரம் அப்படியே விட்டுவிடலாம்.

  MORE
  GALLERIES

 • 610

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  வெள்ளரித் துண்டுகள் : கண்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ரத்த சிவப்பை குறைக்க மற்றொரு பிரபலமான மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியம் வெள்ளரியை பயன்படுத்துவது. வெள்ளரியை எடுத்து மெல்லிய வட்ட வடிவத் துண்டங்களாக்கி கண்களை மூடி, கண்களின் மேல் மெல்லிய வெள்ளரி துண்டுகளை வைத்து சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடலாம். இது கண்களில் ஏற்படும் எரிச்சலை குறைப்பதோடு, கண்களுக்கு புத்துணர்ச்சியூட்டும்.

  MORE
  GALLERIES

 • 710

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  டீ பேக்ஸ் : Tea bags என்பவை ருசியான டீ-யை குடிப்பதற்கு மட்டுமல்ல கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் சிவப்பையும் குறைக்க உதவும். பிளாக் டீ பேக்ஸை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து விடுங்கள். சில நிமிடங்கள் கழித்து ஆறிய பிறகு கண்களை மூடி கண்களுக்கு மேல் அந்த டீ பேக்ஸை சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 810

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டர் எனப்படும் வாசனை மிக்க பன்னீர், இயற்கையிலே அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சுத்தமான காட்டன் உருண்டையை சிறிதளவு ரோஸ் வாட்டரில் ஊற வைக்கவும். சில நிமிடங்கள் கழித்து உங்கள் கண்களை மூடி, எரிச்சல் கொண்ட அல்லது சிவந்த கண்களுக்கு மேல் ரோஸ் வாட்டரில் ஊற வைத்த காட்டன் பால்-ஐ வைத்து சுமார் 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.

  MORE
  GALLERIES

 • 910

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  கண்களுக்கு எக்ஸ்சர்சைஸ் : சோர்வு அல்லது நீண்ட ஸ்கிரீன் டைம் காரணமாக உங்களது கண்கள் பயங்கரமாக சிவந்து போனால், கண்களுக்கு ஓய்வு அளிக்க Blinking Exercises-களை முயற்சிக்கவும். கண்களை சில நொடிகள் வேகமாக சிமிட்டுவது, அதைத் தொடர்ந்து கண்களை திறப்பது மற்றும் பல முறை இந்த பயிற்சியை மீண்டும் செய்வதன் மூலம் Eye strain-ஆல் ஏற்படும் கண் சிவப்பு குறையும்.

  MORE
  GALLERIES

 • 1010

  சிவந்த கண்களை உடனே சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்..!

  ஓவர்-தி-கவுன்ட்டர் ஐ ட்ராப்ஸ் : Vasoconstrictors-ஐ கொண்ட இந்த ஐ ட்ராப்ஸ்கள் கண் சிவத்தல் மற்றும் கண் எரிச்சலை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். எனினும் இவற்றை பயன்படுத்தும் முன்பு மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பாக்டீரியா அல்லது வைரஸ்களால் ஏற்படும் கண் தொற்று அல்லது எரிச்சல் உருவாகும் அபாயத்தை குறைக்கத கைகளை அடிக்கடி கழுவுவது உதவும். 1 வாரத்திற்கும் மேல் கண் சிவப்பு மறையவில்லை என்றால் எரிச்சல் நீடித்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது.

  MORE
  GALLERIES