முகப்பு » புகைப்பட செய்தி » சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

சைனஸ் பிரச்சனை தீவிர நிலை அடையும் போது மக்களுக்கு மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால் முறையான சிகிச்சை என்பது அவசியம்.

  • 18

    சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

    இன்றைக்கு உள்ள காற்று மாசுபாட்டின் காரணமாக இளம் வயதிலேயே பலருக்கு சைனஸ் பிரச்சனை ஏற்படுகிறது. குறிப்பாக ஒவ்வாமை, சளி, பாக்டீரியா தொற்று போன்ற பல காரணங்களால் மூக்கின் இரு பக்க குழிகளுலும் சளி நிரம்பி இருப்பதையே தான் நாம் சைனஸ் என்கிறோம். இந்த சைனஸ் பிரச்சனைக்கு உள்ளாகும் மக்களுக்கு மூக்கு அடைப்பு, காய்ச்சல், மூக்கு ஒழுகுதல் மற்றும் முகத்தில் எரிச்சல் போன்ற அறிகுறிகள் அடிக்கடி ஏற்படும். இந்த சைனசிடிஸ் அறிகுறிகளின் சராசரி காலம் 10 நாள்கள் ஆகும். இருப்பினும் நாள்பட்ட சைனசிடிஸ் அறிகுறிகள் என்பது 12 வாரங்கள் வரை நீடிக்கும்.

    MORE
    GALLERIES

  • 28

    சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

    இது தீவிர நிலை அடையும் போது மக்களுக்கு மூளைக்காய்ச்சல், மூளை அழற்சி போன்ற பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால் முறையான சிகிச்சை என்பது அவசியம். ஆனால் எத்தனை மருத்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் சைனஸ் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு கிடைக்காத நிலையில் தான், இயற்கையான முறையில் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மருந்து இல்லாமல் சைனசிடிஸ் சிகிச்சைக்கான வழிமுறைகள்.

    MORE
    GALLERIES

  • 38

    சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

    நீரேற்றத்துடன் இருத்தல்: சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.மேலும் டீ, ஜூஸ் போன்றவற்றை சர்க்கரை இல்லாமல் குடிப்பதன் மூலம் உங்கள் உடல் உறுப்புகளை நீர்ச்சத்துடன் வைத்திருக்கும். ஏனென்றால் இந்த திரவு உணவுகள் உடலில் சளிளை கரைத்து எரிச்சல் கொடுக்கும் சைனஸிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். மேலும் நீங்கள் ஆல்கஹால், கேஃபைன மற்றும் புகைப்பிடித்தலை நீங்கள் தவிர்த்துவிட வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 48

    சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

    நாசல் ஸ்ப்ரேக்கள்: இப்பிரச்சனையின் பாதிப்பைக் குறைக்க, நீங்கள் சைனஸை ஈரப்பதமாக வைத்திருப்பது அவசியம். இது நீங்கள் தூங்கும் போது நாசிப் பாதைகளில் அடைப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும். கூடுதலாக நெரிசலைக் குறைக்க இயற்கை உப்பு நிறைந்த நாசல் ஸ்ப்ரேக்களை நீங்கள் முயற்சி செய்யவும்.

    MORE
    GALLERIES

  • 58

    சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

    இயற்கை எண்ணெய்கள்: யூகலிப்டஸ் போன்ற இயற்கை மூலிகை எண்ணெய்கள் சைனஸ் பிரச்சனையைத் தீர்க்க நல்லாய்ஹோறு வழியாக அமையும். ஆய்வுகளின்படி, யூகலிப்டஸ் எண்ணெயில் உள்ள முக்கிய மூலப்பொருளான சினியோல், கடுமையான சைனசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மீட்டெடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

    ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு : சைனஸ் தொற்றை நீங்கள் எதிர்த்துப் போராட, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.. வெங்காயம் மற்றும் ஆப்பிள்களில் இருந்து கிரீன் டீ மற்றும் சிவப்பு ஒயின் வரை அனைத்திலும் உள்ள இயற்கையாக நிகழும் தாவர கூறு Quercetin, பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

    சூடாக சாப்பிடுதல் : சைனஸ் வலியைப் போக்குவதற்க நீங்கள் எப்போதும் சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். உங்கள் கண்கள், கன்னங்கள் மற்றும் மூக்கைச் சுற்றி வெதுவெதுப்பான, ஈரமான துண்டுகளை போர்த்தி, முக வலியைப் போக்கவும் மற்றும் வெளிப்புற நாசி பாதையை சுத்தம் செய்ய உதவவும்.

    MORE
    GALLERIES

  • 88

    சைனஸ் பிரச்னை இருக்கா? இனி இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க!

    போதுமான தூக்கம் : உங்களுக்கு சைனஸ் தொற்று இருந்தால் வழக்கத்தை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் உடல் ஓய்வெடுக்க நிறைய நேரம் தூங்குங்கள்.

    MORE
    GALLERIES