உடலில் பொதுவாக எலும்புகள் வலுவுடன் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். எலும்புகள் தான் நமது உடலில் அடிப்படை அமைப்பை உருவாக்குகின்றன. ஆனால் முறையாக நாம் எலும்புளின் ஆரோக்கியத்தைக் கவனிக்க வில்லை என்றால், எலும்பில் அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோசிஸ் என்ற பிரச்சனையை நமக்கு ஏற்படுத்தும்.
வயதானவர்கள் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் எலும்பு ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. எனவே தான் இதுப்போன்ற பிரச்சனைகளை நீங்கள் சரிசெய்ய வேண்டும் என்றால், உங்களுக்கு யோகா சிறந்த வழிகளில் ஒன்றாக உள்ளது. இதோ என்னென்ன யோகாசனங்கள் என்பது குறித்து இங்கே நாமும் அறிந்துக் கொள்வோம்..
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் யோகாசனங்கள்: வீரபத்ராசனா: எலும்புகளுக்கு போதுமான அளவு ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்ட்ரோஜனுடன் உடலுக்கு வழங்குவதற்குத் தேவையான அட்ரீனல் சுரப்பிகளை நமக்கு வழங்க உதவும் ஆசனம் தான் விராபத்ராசனா..இது முதுகுத்தண்டு, தோள்கள், கைகள், முழங்கால்கள் மற்றும் முழங்கைகளின் வலிமையை அதிகரிப்பதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
எனவே இந்த ஆசனத்தை நீங்கள் செய்யும் போது, இரண்டு கால்களையும் இணைத்து, கைகளைப் பக்கவாட்டில் வைத்து நேராக நிற்க வேண்டும். பின்னர் வலது பாதத்தை விரிப்பின் மீது தட்டையாக வைத்து, இடது காலை ஊன்றிய படி வைக்கவும். கைகளை தலைக்கு நேராக நீட்டவும். இந்த நிலையை சில விநாடிகள் அப்படியே வைத்திருக்கவும். மெதுவாக விடுவித்து, மறுபுறம் மீண்டும் செய்யவும்.
இந்த ஆசனத்தை நீங்கள் செய்வதற்கு, முதலில் உடலின் பக்கவாட்டில் கைகளை வைத்து நிமிர்ந்து நிற்க வேண்டும். பின்னர் வலது முழங்காலை சற்று மடக்கி, வலது பாதத்தை இடது காலின் மேல் உயரமாக வைக்கவும். இதையடுத்து உங்களது கால்கள் நிமிர்ந்து இருப்பதை உறுதி செய்து, மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி நமஸ்கார முத்திரைக்குள் வைத்த பின்னர், முதுகுத் தண்டை நேராக வைத்து சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பின்னர் மெதுவாக இந்த நிலைக்கு வந்து மற்ற காலால் மீண்டும் செய்யவும்.
உட்கடாசனா (நாற்காலி போஸ்) : தோள்பட்டை மூட்டுகளில் உறுதியையும், வலிமையையும் உருவாக்கும் ஆசனம் தான் இது. இந்த ஆசனத்தைச் செய்வதற்கு நீங்கள், முதலில் கால்களை இடுப்பு அகலத்தில் வைத்து நிற்கவும். பின்னர் நமஸ்கார முத்திரையில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, 45 டிகிரி கோணத்தில் இருக்கவும். நாற்காலியில் உட்காருவது போல் முழங்கால்களை சற்று வளைக்கவும். பின்னர் சுவாசிக்கும் போது, ஒரு நிமிடம் தொடர்ந்து அப்படியே இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக விடுவித்து மீண்டும் செய்ய பழகுங்கள்.
இந்த ஆசனத்தை நீங்கள் செய்வதற்கு முதலில், முதுகில் படுத்து கைகளை பக்கவாட்டில் வைத்துக்கொள்ளவும். கால்கள் தரையில் உறுதியாக அழுத்தும் வகையில் முழங்கால்களை வளைக்கவும். கைகளின் வலிமையால், இடுப்பை தரையில் இருந்து தள்ளுங்கள். பின்னர் கழுத்தும், முதுகும் தரையில் படுமாறு பார்த்துக்கொண்டு மெதுவாக விடுவிக்கும் முன் 30 வினாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.
சந்தோலனாசனா (பிளாங்க் போஸ்) : தோள்கள், கைகள் மற்றும் மணிக்கட்டுகளை பலப்படுத்தும் ஆசனம் இது. இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில், உள்ளங்கைகளைத் தரையில் வைத்து தோள்களை நோக்கி கைகளை கொண்டு வாருங்கள். இப்போது ஒரு நேர் கோட்டை உருவாக்க உடலை மெதுவாக மேலே தள்ளுங்கள். கைகள் தரையில் செங்குத்தாக இருக்க வேண்டும் மற்றும் உடல் தரையில் இணையாக இருக்க வேண்டும்.