வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக செயல்பட்டால் உங்களின் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். அதாவது அதிகமான கலோரிகளை எரிக்க முடியும். அவ்வாறு தேவையற்ற கலோரிகள் எரியும்போது தானாகவே இரத்தத்தின் சார்க்கரை அளவு, கொழுப்பின் அளவு, இரத்த அழுத்தம் இப்படி அனைத்தும் ஒரே சீரான நிலையில் இருக்கும். எனவே தானாக நடக்க வேண்டிய இந்த வளர்ச்சிதை மாற்றத்தின் ஆற்றலை உங்களின் சில மோசமான பழக்கங்கள் தடையாக இருக்கின்றன. அவை என்னென்ன பார்க்கலாம்.
போதுமான அளவு சாப்பிடுவது இல்லை : குறைவான கலோரிகளை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்ற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. ஆனால் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கும் என்பதே உண்மை. நீங்கள் அவ்வாறு போதுமான உணவை சாப்பிடாத போது உடல் தனக்கு தேவையான கலோரிகளை தேக்கி வைக்க முயல்கிறது. எனவே சாப்பிடும் கலோரிகள் உடலில் அப்படியே தங்கிவிடும். இதனால் உடல் எடையை விரைவில் குறைக்க முடியாது.
ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது : உட்கார்ந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறீர்கள் எனில் உங்களின் வளர்ச்சிதை மாற்றம் குறைவாக இருக்கும். கொரோனா வைரஸின் ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டிலிருந்து அலுவலகப் பணி செய்த போது பலரும் ஒரே இடத்தில் அமர்ந்தே வேலை செய்ததால் வளர்ச்சிதை மாற்றத்தின் அளவும் குறைந்தது. இதனால்தான் பலரும் உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றனர்.
போதுமான அளவு புரதம் சாப்பிடுவதில்லை : ஆரோக்கியமான எடை இழப்பை அடைய போதுமான புரதம் சாப்பிடுவது முக்கியம். புரோட்டீன் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும் மற்றும் உங்கள் உடல் கலோரிகளை எரிக்கும் விகிதத்தை அதிகரிக்கிறது. நீங்கள் உணவை ஜீரணிக்கும்போது, வளர்சிதை மாற்றத்தில் அதிகரிப்பு ஏற்படுகிறது, இது உணவின் வெப்ப விளைவு (TEF) என்று அழைக்கப்படுகிறது.
போதுமான உறக்கம் இல்லாமை : ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க போதுமான தூக்கம் பெறுவது முக்கியம். குறைந்த நேரம் தூங்குவது இதய நோய், நீரிழிவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். போதுமான தூக்கம் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறைத்து எடை அதிகரிக்கும். சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைத்து உங்கள் உடலின் சர்க்காடியன் தாளத்தை சீர்குலைக்கும்.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் சாப்பிடுவது : சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து மிகவும் வேறுபட்டவை. அவை எளிதில் ஜீரணமாகி இரத்த சர்க்கரை அளவின் அதிகரிப்புக்கு வழிவகுக்கின்றன. மேலும் அவற்றை உடைக்க உங்கள் உடல் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது. எனவே, அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது தானியங்களுடன் ஒப்பிடுகையில் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. இதனால் கலோரிகளை எரிக்க உடல் மிகவும் சிரமப்படுகிறது.
டயட்டை கடுமையாக பின்பற்றுதல் : டயட் பின்பற்றுவது, குறிப்பாக நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் உடலானது அடிப்படை தினசரி வேலைகளைச் செய்ய ஆற்றலைச் சேமிக்க முயற்சிக்கிறது. இதற்காக கலோரிகளை எரிக்காமல் சேமித்து வைத்துக்கொள்ளும். எனவே நீங்கள் போதுமான உணவுகள் , தேவையான ஊட்டச்சத்துகளை சரியான முறையில் எடுத்துக்கொள்வது அவசியம்.