உடலில் அன்றாடம் கவனிக்க வேண்டிய உறுப்புகளில் மார்பகங்களும் ஒன்று. ஆனால், பலரும் அதனை கண்டுகொள்வதில்லை அல்லது கவனிப்பதில்லை. உணர்ச்சிகளை தூண்டும் பாலுறுப்பு என்பதால் சில பெண்கள் மார்பகங்களை கவனிக்க தவறுகின்றனர். உங்களுக்கு கூச்சமாக இருக்கலாம் அல்லது கவனிக்காமல் இருக்கலாம். ஆனால் மார்பகத்திற்கு உங்களின் அன்றாட கவனிப்பு தேவை. நாள்தோறும் சில நொடிகள் மார்பகத்தை பார்த்துவந்தால்கூட, அங்கு ஏற்படும் உடலியல் பாதிப்புகளை கண்டறிய முடியும். நோய்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையாக செயல்பட முடியும். மார்பகத்தை பராமரிப்பதில் பெண்கள் பொதுவாக செய்யக்கூடிய 6 தவறுகள் என்வென்பதை பார்ப்போம்.
பொருந்தாத பிரா : பொருந்தாத பிரா அணியும்போது, உங்களால் இயல்பாக இருக்க முடியாது. பிராவின் அளவை தெரிந்து கொண்டு சரியான அளவை தேர்தெடுத்து வாங்க வேண்டும். இறுக்கமாக அணியும்போது இதயத்தில் அழுத்தம் உண்டாகும். ரத்த ஓட்டம் தடைபட வாய்ப்புகள் உள்ளன. கழுத்து, தோள்பட்டை, முதுகில் வலி ஏற்படும். மிகவும் இலகுவான பிராவையும் அணியக்கூடாது. அது நிலையான மார்பக அழகை கொடுக்காமல், ஒட்டுமொத்த உடலியல் அழகையும் கெடுத்துவிடும்
மார்பக காம்பு முடி : மார்பக காம்பில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு பலர் ரேசரை பயன்படுத்துகின்றனர். அப்போது, அந்த பகுதியில் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகும் என Physical Activity and Health இதழில் வெளியாகியுள்ள ஆய்வு எச்சரிக்கிறது. மேலும், முடியை அகற்றுவதற்கு கிரீம் பயன்படுத்துவதும் மார்பக செல்களை பாதிக்கும் என எச்சரிக்கும் நிபுணர்கள், போலி ஹேர் ரிமூவல்கள் மற்றும் தரமற்ற ரேசர் பயன்பாட்டை இதுபோன்ற முக்கியமான இடங்களில் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கின்றனர்.
மார்பக காம்புகளில் அழுத்தம் : மார்பக காம்பை அழுத்துவது என்பது பால் உற்பத்தியை பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். லாவா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், முளைக்காம்பை அழுத்துவதால் பால் உற்பத்தி குழாய்கள் சேதமடைவதாகவும், பாலூட்டிகளுக்குள் புண்ணாகும் என கூறியுள்ளது. இதில் தொற்று ஏற்பட்டு சீல் வடியவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ள நிபுணர்கள், தவறான வழிகாட்டல்களை பின்பற்றக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
புகைப்பிடித்தல் : புகைப்படித்தல் இதயத்துக்கும், நுரையீரலுக்கும் தீங்கானது என்பதை அறிவோம். பெண்களைப் பொறுத்தவரையில் மார்பகத்தையும் பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதிகம் புகைப்பிடிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் என்றும், மார்பக நெகிழ்வு அமைப்பில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கின்றனர். குழந்தை பிறக்கும்போது பாலூட்டிகளில் பால் சுரப்பதில் கடினத்தை எதிர்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
பிரா அணியாதிருத்தல் : பிராவை இறுக்கமாக அல்லது இலகுவாக அணியக்கூடாது என ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதேநேரத்தில் பிரா அணியாமலும் இருக்கக்கூடாது. மார்பகம் நிலையாக இருப்பதற்கு ஒரு உதவி தேவைப்படுகிறது. பிரா அணியாமல் வெளியே செல்லும்போது, உங்களுக்கு வலி உண்டாகும், அசௌகரியமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். வெளியில் எப்போது சென்றாலும் உடையினால் தேவையற்ற சங்கடங்களை எதிர்கொள்ளக்கூடாது.
குழாய் நாடா (duct tape) : முன்னழகை கவர்ச்சியாக காட்டுவதற்கும், பிராவுக்கு உதவியாக இருப்பதற்கும் பேஷன் வீடியோக்களில் குழாய் நாடா எனப்படும் டக்ட் டேப் பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இதனை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். டேப் - ஐ பயன்படுத்தும்போது அதில் இருக்கும் பசை ஆகியவை அலர்ஜி, அரிப்பு மற்றும் தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.