குழந்தை பிறப்பு என்பது பெற்றோரின் வாழ்க்கையை மட்டுமல்ல தாயின் உடலிலும் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் ஒரு உயிரை வளர்க்க தன்னுள் இடம் கொடுப்பதால் பெண்ணின் ஓட்டுமொத்த உடலுமே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்க வேண்டியுள்ளது. ஏற்கனவே பெண்ணை உடல் உருவத்தை வைத்து அளவிடும், சமூகத்தில் இது மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்க கூடிய விஷயமாக இருக்கிறது.
1. ஸ்ட்ரேச் மாக்ஸ் : தாயின் வயிற்றிற்குள் ஒரு குழந்தை ஒன்றல்ல, இரண்டல்ல 10 மாதங்கள் முழுமையாக வளர்கிறது. குழந்தை வளர வளர அதற்கு ஏற்ற அளவிற்கு பெண்ணின் வயிறும் வளர்கிறது. கர்ப்ப காலத்தில் விரிவடையும் தோலானது, குழந்தை பெற்ற பிறகு பிரசவ தழும்புபாக மாறுகிறது. இது கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்ல, உடல் எடை அதிகரிக்கும் ஆண், பெண் என இருவருக்குமே வயிறு, மார்பகங்கள், கைகள் மற்றும் கால்களில் கூட ஸ்ட்ரேச் மார்க்ஸ் தோன்றுவதை காணலாம். இவை காலப்போக்கில் மறைந்துவிடக்கூடியவை.
2. மார்பக அளவில் மாற்றம் : கர்ப்பம் தரித்த பெண்களின் மார்பக அளவு முன்பை விட இரண்டு மடங்கு அளவுகள் கூடுகிறது. இதற்கு காரணம் குழந்தை பெற்ற பிறகு, அதற்கான பால் உற்பத்தி அதிகரிப்பதால் மார்பகங்களில் வீக்கம் ஏற்படுகிறது. பால் சுரக்கும் காலம் வரை பருத்து பெரியதாக காட்சியளிக்கும் மார்பகங்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் முடிந்ததும் சிறியதாகிறது. அப்போது மார்பகங்கள் மிகவும் தளர்ந்து போகின்றன. இது மகப்பேறு காலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஏற்படக்கூடியது என்பதால் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.
3. கட்டுப்பாடு இல்லாமல் போதல் : குழந்தை பெற்ற பிறகு பெண்கள் தங்களது சிறுநீர்ப்பையின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடுகிறது. இதனால் கர்ப்ப காலத்தைப் போலவே அடிக்கடி சிறுநீர் கழிப்பது அல்லது சிறுநீரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத உணர்வு ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை ஓராண்டிற்குள் நார்மல் நிலைக்கு திரும்பிவிடும். அப்படி ஓராண்டுக்கும் மேல் பிரச்சனை தொடர்ந்தால் மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது நல்லது.
4. வயிறு வீக்கம் : பிரசவத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்ளும் உடல் மாற்றங்களில் வயிற்று வீக்கம் ஒன்றாகும். கர்ப்ப காலத்தில், வயிறு மற்றும் கருப்பை அளவு அதிகரிக்க தொடங்குகிறது, அது குழந்தை பிறந்த உடனேயே இயல்பு நிலைக்கு திரும்பாது என்பதால் இந்த பிரச்சனையை புதிய தாய்மார்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கர்ப்ப காலத்திற்கு பிறகு ஆறு முதல் எட்டு வாரங்கள் கழித்து கர்ப்பையானது இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கிறது, அப்போது வயிற்றுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலமாக அதன் அளவை குறைக்க முடியும்.
5. இடுப்பு சைஸ் கூடுவது : கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது, ஒரு பெண்ணின் எலும்பு அமைப்பும் மாறுகிறது. பிரசவித்தின் போது குழந்தையை உடலில் இருந்து வெளியே தள்ளுவதை எளிதாக்குவதற்கு இடுப்பு எலும்பு விரிவடைகிறது. எனவே, பல பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு இடுப்பு சில அளவுகள் அகலமானது போல் மாறுகிறது.
7. முடி உதிர்வு : பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு ஆகும். மகப்பேறுக்குப் பிறகு குழந்தையை கவனிக்கும் தாய்மார்கள், தங்களது உடல் நலனில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் சரியான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவு இல்லாததால் முடி உதிர்வு போன்ற பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.