முத்தம் : முத்தம் தருவதால் வாய்வழியாக ஹெர்பெஸ்-HSV 1, பிறப்புறுப்பு ஹெர்பெஸ்-HSV 2, சைட்டோமெகலோ வைரஸ் மற்றும் சிபிலிஸ் போன்ற தொற்று பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உங்களுக்கு சளி, தொண்டை வலி, தொண்டையில் சளி தொற்று போன்றவை இருக்கும்போது முத்தம் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் சளி நோய் கிருமிகளை எளிதில் பரப்பும் தன்மை கொண்டது.
ஓரல் செக்ஸ் : வாய் வழி உறவு என்னும் ஓரல் செக்ஸ் மூலம் தொற்று பரவுவதற்காக வாய்ப்பு மிகவும் அதிகம். இது பாதுகாப்பற்ற உடலுறவும் கூட. ஆனால் இதுதான் உடலுறவில் பொதுவான விஷயமாக உள்ளது. வாய் வழி உறவில் கிளமிடியா மற்றும் கோனோரியா என்னும் தொற்று பரவுகிறது. சிபிலிஸ் மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பெஸ் தொற்றும் ஓரல் செக்ஸில் பரவும் என்பதால் பிறப்புறுப்பில் கட்டி, பரு , எரிச்சல் இப்படி ஏதாவதொரு பாதிப்பு இருப்பின் முத்தம் தருவதை தவிர்க்கவும்.
டூத் பிரெஷ் பகிர்தல் : நீங்கள் ஒருவரின் பிரஷை பயன்படுத்துவது கிட்டத்தட்ட ஓரல் செக்ஸில் ஈடுபடுவதற்கு சமம். ஏனெனில் அதன் மூலம் உண்டாகும் தொற்றுக்கு இணையான பாதிப்பு பிரெஷ் பகிர்வதிலும் உள்ளது. ஏனெனில் ஒருவர் பயன்படுத்திய பிரெஷில் ஈறுகளின் கசியும் இரத்தம் படிந்திருக்கலாம். அதை நீங்கள் பயன்படுத்தும்போது நோய் கிருமிகளை உங்கள் உடலுக்குள் கடத்தலாம்.
செக்ஸ் டாய்ஸ் பகிர்தல் : சுய இன்பத்திற்கு செக்ஸ் டாய்ஸ்தான் பலரும் பயன்படுத்துகின்றனர். செக்ஸ் ஆசையை தீர்த்துக்கொள்ள இது பாதுகாப்பான வழியும்கூட. ஆனால் அதேசமயம் நீங்கள் மற்றவர் பயன்படுத்தும் செக்ஸ் டாய்ஸுகளை பயன்படுத்துகிறீர்கள் எனில் உங்களுக்கு பாலியல் தொற்று உண்டாகலாம். எனவே உங்கள் செக்ஸ் டாய்ஸை யாருக்கும் பகிராதீர்கள். நீங்களும் யாரிடமும் வாங்கதீர்கள். செக்ஸ் டாய்ஸை பாதுகாப்பாக பராமரிப்பதும் அவசியம். எனவே பயன்படுத்திய பின் சரியான முறையில் சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
பாலியல் தொற்று பரிசோதனை : பாலியல் தொற்று பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் உங்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளலாம். ஏனெனில் சில சமயங்கள் அறிகுறியே இல்லாமல் தீவிரமடைந்தபின் தெரிய வரும். எனவே உங்களுக்கு பாலியல் தொற்று இல்லை என்பதை உறுதி செய்வது போல் உங்கள் பார்ட்னருடன் புணர்ச்சியில் ஈடுபடும் முன் அவருக்கும் தொற்று இல்லை என்பதை உறுதி செய்வது பாதுகாப்பான செக்ஸுக்கு வழி வகுக்கும். எனவே மேலே சொன்ன விஷயங்களை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.