முகப்பு » புகைப்பட செய்தி » கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

கீழக்காணும் நடைமுறைகளை உங்களது அன்றாட வழக்கத்தில் பின்பற்றுவதன் மூலம் நாள்பட்ட வலி உள்ள நபர்கள் மருந்துகளை சார்ந்திருப்பதை குறைக்கலாம்.

  • 19

    கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

    நம்மில் பெரும்பாலானோருக்கு வாழ்க்கை மற்றும் வேலைமுறை காரணமாக உடலில் நாள்பட்ட வலி இருக்கிறது. உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு மருத்துவ நிலையாக இருக்கிறது நாள்பட்ட வலி.

    MORE
    GALLERIES

  • 29

    கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

    இந்த மருத்துவ நிலை கணிசமான அளவு உடல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மருந்துகள் தற்காலிகமாக இந்த வலிகளில் இருந்து நிவாரணம் அளித்தாலும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. தவிர நாள்பட்ட வலிக்கான மூல காரணத்தை மருந்துகள் நிவர்த்தி செய்யாமல் போகலாம். நாள்பட்ட வலியை நிர்வகிப்பதில் மனம் மற்றும் உடல் சார்ந்த பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 39

    கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

    கீழக்காணும் நடைமுறைகளை உங்களது அன்றாட வழக்கத்தில் பின்பற்றுவதன் மூலம் நாள்பட்ட வலி உள்ள நபர்கள் மருந்துகளை சார்ந்திருப்பதை குறைக்கலாம் . மேலும் இவற்றால் ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மேம்படும்.

    MORE
    GALLERIES

  • 49

    கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

    மைன்ட்ஃபுல்னெஸ் மெடிட்டேஷன் : தியானங்களில் பல வகை உண்டு. இதில் மைன்ட்ஃபுல்னெஸ் மெடிட்டேஷன் என்பது கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் நிகழ்காலத்துடன் இணைந்திருப்பதை உள்ளடக்கியது. கவலை மற்றும் மனச்சோர்வை குறைப்பதன் மூலமும், மனநிலையை மேம்படுத்துவதன் மூலமும், வலிகளுக்கான சகிப்புத்தன்மையை அதிகரிப்பதன் மூலமும் நாள்பட்ட வலியை நிர்வகிக்க இந்த பயிற்சி உதவிகரமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த தியானம் உடல் செயல்பாடுகளை மேம்படுத்தி வலியின் தீவிரத்தை குறைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

    MORE
    GALLERIES

  • 59

    கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

    யோகா : உடல் தோரணைகள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவற்றை யோகா ஒருங்கிணைக்கிறது. நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் நாள்பட்ட வலியை நிர்வகிக்க யோகா உதவியாக உள்ளது. அதே போல நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலையை மேம்படுத்துவதன் மூலம் நாள்பட்ட வலியை நிர்வகிக்க யோகா உதவியாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 69

    கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

    தாய்ச்சி (Tai-chi ): சீன தற்காப்பு கலையான தாய்ச்சி மெதுவான, பாயும் அசைவுகள் மற்றும் ஆழமான சுவாசத்தை உள்ளடக்கியது. சமநிலை, வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த இது உதவும் என கண்டறியப்பட்டுள்ளது. தவிர இது மனஅழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 79

    கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

    அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavioural Therapy - CBT):
    CBT என்பது எதிர்மறை சிந்தனை முறைகள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதில் கவனம் செலுத்த கூடிய ஒரு வகை உளவியல் சிகிச்சை ஆகும். பதற்றம், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்க இது உதவுகிறது. நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அறிகுறிகளை திறம்பட நிர்வகிக்கும் திறன்களை கற்க CBT உதவுகிறது.

    MORE
    GALLERIES

  • 89

    கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

    அக்குபஞ்சர் : பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் சீன மருத்துவ முறையான அக்குபஞ்சரில், மெல்லிய ஊசிகளை உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் குத்தி சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுவார்கள் நிபுணர்கள். இந்த வைத்திய முறையில் எண்டோர்பின் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் நாள்பட்ட வலியின் அறிகுறிகளை நிர்வகிக்க முடியும். அக்குபஞ்சர் சிகிச்சையானது தூக்கத்தை மேம்படுத்துவதோடு மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    MORE
    GALLERIES

  • 99

    கை, கால், முதுகு என நாள்பட்ட வலிகளால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கான பயிற்சிகள் இதோ..

    பயோஃபீட்பேக் : பயோஃபீட்பேக் என்பது இதய துடிப்பு, மசில் டென்ஷன் மற்றும் சரும வெப்பநிலை போன்ற உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்க, கட்டுப்படுத்த எலெக்ட்ரானிக் டிவைஸ்களை பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஒரு டெக்னிக் ஆகும். நாள்பட்ட வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் வலிக்கான அவர்களின் physiological response-களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை கற்பிக்க இது உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது உடல் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு கவலை மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது.

    MORE
    GALLERIES