உடல் எடை அதிகமாக இருந்தாலே நம்மால் சில எளிமையான வேலைகளை கூட கடினமாக்கிவிடும். இதனாலேயே நாம் எந்த வேலையையும் அளுத்துக்கொள்ளாமல் செய்வோம். இதன் விளைவாக உடல் எடையும் குறையாது. மாறாக அதிகரிக்கவே செய்யும். இப்படி உடல் உழைப்பு இல்லாமல் அதிகரிக்கும் உடல் எடையால் பல நோய்களை சந்திக்க நேரிடும். அவ்வப்போது சில உபாதைகளையும் சந்திக்கலாம். அப்படி நீங்கள் உடல் பருமனால் சில அறிகுறிகளை சந்திக்கிறீர்கள் எனில் அவை ஆபத்தில் முடியலாம். எனவே உடனே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் முற்படுவது நல்லது. அப்படி எச்சரிக்கும் 6 அறிகுறிகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
நோய்க்கு சிகிச்சை எடுத்தல் : மோசமான வாழ்க்கை முறை, சீரற்ற உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, அடிக்கடி விட்டமின் குறைபாடு போன்ற காரணங்களுக்காக மருத்துவரிடம் மாத்திரைகள், சிகிச்சை எடுத்து வருகிறீர்கள் எனில் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைப்பது நல்லது. ஏனெனில் உடல் பருமன் உங்கள் பிரச்சனைகளை தீவிரமாக்கலாம்.
உடல் சோர்வு : நீங்கள் அதிக உடல் எடையுடன் இருக்கும்போது உடல் அடிக்கடி சோர்வடையும். எந்த வேலை செய்தாலும் உடலே சோர்ந்து போவீர்கள். நீங்கள் பருமனாக இருக்கும்போது உடல் உள் உறுப்புகளும் கூடுதலாக வேலை செய்யும். அதற்காக அதிக ஆற்றலை உறிஞ்சும். எனவேதான் அடிக்கடி சோர்வடைந்து அமர்கிறீர்கள். எனவே உங்கள் அன்றாட வேலைகளுக்கே இடையூராக இருக்கும் உடல் எடையை விரைவில் குறைக்கும் முயற்சியில் முற்படுங்கள்.
தண்ணீர் உடல் எடைக்கு காரணம் : அதிகமாக தண்ணீர் குடித்து உடல் எடை அதிகரிக்கும் என்பது சாத்தியமற்றது. ஆனாலும் நீர் சத்து அதிகமாக இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும். காரணம் கெட்ட நீர் வெளியேறாமல் சதைகளில் நீர் கோர்த்திருக்கும். இவற்றை எளிதில் டீடாக்ஸ் செய்யலாம். அதுவே உங்கள் எடையை பருமாக மாற்றும். அதுவும் ஆபத்துதான் என்பதால் கெட்ட நீரை வெளியேற்றுங்கள்.