கால்களுக்கு மசாஜ் செய்வது பண்டைய காலங்களிலிருந்து இன்றியமையாத ஆரோக்கியமான உடற்பயிற்சி ஆகும். கால் மசாஜ்களுக்கு ஆயுர்வேதம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. சரியான வழியில் மசாஜ் செய்வதால் உங்கள் நரம்புகளை தூண்டுகிறது, இது உங்கள் மனதையும் உடலையும் மேம்படுத்தி தளர்வான தசைகள், பதற்றம் மற்றும் வலியை குறைக்கிறது. இதற்காக நீங்கள் கடினமாக எதுவும் செய்ய தேவையில்லை, எளிமையாக மசாஜ் செய்தால் போதும். பாதங்களோடு தொடர்புடைய உடலில் இருக்கும் அத்தனை உறுப்புகளுக்கும் அற்புதங்கள் நடக்கும்.
எப்படி மசாஜ் செய்வது ? கால்களை நன்றாக கழுவுங்கள். கால்களை நீட்டி உட்கார்ந்து, கால்களுக்கு கீழ் பழைய துணியை போடுங்கள். எண்ணெய்யை வெதுவெதுப்பாக சூடேற்றி, கால் பாதங்கள் ஒவ்வொன்றையும் இலேசாக மசாஜ் செய்யவும். கைகளால் மிதமாக அழுத்தமில்லாமல் பாதங்களை பிடிக்கவும். கால்விரல்களின் முன் பக்கத்திலும் மசாஜ் செய்யவும். கால் விரல்களை மிதமாக பிடித்துவிடவும். கால்விரல்கள் மற்றும் பாதங்கள் இருக்கும் பகுதியில் தடவி விடவும். மென்மையாக பாதங்கள் முழுக்க பிடித்துவிடவும். 5 நிமிடங்கள் போதும் இந்த மசாஜ் செய்ய செய்ய இதமாக இருக்கும். கால் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
கால் மசாஜ்கள் கவலை, மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்கின்றன. நீங்கள் பொறுமையாக மசாஜ் செய்யும் போது, உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டுகிறது. மசாஜ் செய்யும் போது குறிப்பாக மேல் பாதத்தின் நுனி முதல் ஆரம்பிக்கவும். இப்படி செய்வதால் உங்கள் உடலில் சோர்வுகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியாகும். மேலும் கால் மசாஜ் தூக்கமின்மை பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
தலைவலியிலிருந்து நிவாரணம் பெற கால் மசாஜ் ஒரு எளிய முறையாகும். சில நேரங்களில் தலைவலி, சைனஸ் உருவாகிறது. இவற்றில் இருந்து நிவாரணம் பெற. உங்கள் பெருவிரலின் அடிப்பகுதியில் அழுத்தம் கொடுப்பது, உங்கள் கால் மற்றும் ஒவ்வொரு கால்விரலின் முன்னும் பின்னும் மசாஜ் செய்வதன் மூலம் நீங்கள் உடனடியாக வித்தியாசத்தைக் காண்பீர்கள்
மேலும் கால்களுக்கு மசாஜ் செய்வது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. ஏனெனில் கால்களில் எண்ணற்ற நரம்புகளின் முடிவுகள் உள்ளன. மேலும் பெருவிரலில் மசாஜ் செய்தால் மூளை மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் தடுக்கப்படும். காலின் இரண்டாம், மூன்றாம், நான்காம் விரல்களில் கொடுக்கப்படும் அழுத்தம் பல் வலிக்கு உடனடி நிவாரணம் தரும். கடைசி சிறு விரல் காது வலியைக் குறைக்கும்.
எப்போதும் உட்கார்ந்து கொண்டே இருப்பது, நின்று கொண்டு வேலை செய்பவர்கள், எல்லோருக்குமே இந்த மசாஜ் நல்ல பலன் கொடுக்கும். இவர்களுக்கு கால் வலியும் குறிப்பாக குதிகால் வலி, பாதவலி, கணுக்கால் வலி என்று இருக்கும். இதனால் கால்களுக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைப்பதிலும் சற்று குறை இருக்கும். இதை தவிர்க்க தினமும் பாதத்துக்கு மசாஜ் செய்யலாம்.