பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் இத்தனை வழிகளில் ஆரோக்கியமா..? படித்தால் நீங்களே அடுத்த முறை முயற்சி செய்வீர்கள்..!
பாத மசாஜ் ஒரு ஆயுர்வேதம் மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.
Web Desk | March 11, 2021, 3:33 PM IST
1/ 8
பொதுவாகவே பாதங்களை மசாஜ் செய்வதால் உடலுக்கு பல எண்ணெற்ற நன்மைகள் கிடைக்கின்றன. பண்டைய காலங்களிலிருந்தே இவை ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக விளங்குகின்றன. பாத மசாஜ் ஒரு ஆயுர்வேதம் மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது. சரியான வழியில் மசாஜ் செய்துவந்தால் அது உடலின் நரம்புகளைத் தூண்டுவதோடு, உங்கள் மனதையும் உடலையும் ஆறுதலடையச் செய்கிறது. மேம்பட்ட சுழற்சி, தளர்வான தசைகள், பதற்றம் குறைதல் மற்றும் மிக முக்கியமாக வலியை குறைத்தல் போன்ற நன்மைகளை உங்களுக்கு வழங்குகிறது.
2/ 8
மேலும் நீங்கள் விரைவான நிவாரணம் பெற புட் ரோலர்களைக் கொண்டு மசாஜ் செய்துகொள்ளலாம். இருப்பினும் உங்கள் உடல் பகுதிகள் ஒரு குறிப்பிட்ட முடிவுகளைப் பெற சரியான அழுத்த புள்ளிகளில் உங்கள் பாதங்களை நீங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதாவது உங்கள் பாதத்தில் இதய புள்ளி, நுரையீரல், கழுத்து புள்ளி என பலவிதமான புள்ளிகள் உள்ளன. அதில் மசாஜ் செய்யும்போது வலி, சோர்வு ஆகியவற்றிலிருந்து மிகவும் தேவையான நிவாரணத்தை நீங்கள் பெறலாம். அப்படி, உங்கள் பாதங்களை மசாஜ் செய்வதால் நீங்கள் பெறும் சில அற்புதமான நன்மைகள் குறித்து விரிவாக தெரிவித்துக்கொள்ளுங்கள்.
3/ 8
மனஅழுத்தத்தை குறைக்கும், தூக்கத்தை தூண்டும்: பாத மசாஜ்கள் கவலை, மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்கும். மசாஜ் செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடலின் நரம்புகளை செயல்படுத்துகிறது. மசாஜ் செய்யும் போது குறிப்பாக மேல் பாதத்தின் நுனி பெரும் நிவாரணத்தைத் தூண்டுகிறது. இதனால் உங்கள் உடல் புத்துணர்ச்சி பெறும். பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் தூக்கமின்மையை எதிர்த்துப் போராடலாம்.
4/ 8
PMS, மாதவிடாய் நிறுத்தத்திற்கு நன்மை பயக்கும்: மனநிலை மாற்றம், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியம் போன்றவை பாத மசாஜ் மூலம் எளிதில் சரிசெய்யலாம். நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெற மசாஜ் செய்யும் போது பாதத்தின் ஆர்க் பகுதியில் கட்டைவிரல் அகலத்தை கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
5/ 8
கர்ப்ப காலத்தில் உதவுகிறது: பிரசவத்திற்கு முன்னும் பின்னும் வீங்கிய பாதம், வலி, மகப்பேற்றுக்கு பிறகான மன அழுத்தம் ஆகியவை பொதுவானது. எனவே, ரிஃப்ளெக்சாலஜி அடிப்படையிலான பாத மசாஜ்கள் பெண்ணின் உடலை விரைவாக குணப்படுத்தவும் சாதாரண வளர்சிதை மாற்ற செயல்பாட்டை விரைவில் அடையவும் உதவுகின்றன. இந்த மசாஜ் எடிமாவின் விளைவுகளை குறைக்க உதவுகிறது.
6/ 8
மல்டிபிள் ஸ்களீரோசிஸுக்கு நன்மை பயக்கும்: நோயாளிகள் பெரும்பாலும் இரட்டை பார்வை, ஒரு கண்ணில் குருட்டுத்தன்மை, தசை பலவீனம், மங்கலான உணர்வு, ஒருங்கிணைப்பில் சிக்கல் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் காரணமாக செயலிழப்பு ஆகியவற்றை அனுபவிக்கின்றனர். ஆனால் பாத மசாஜ்கள், குறிப்பாக ரிஃப்ளெக்சாலஜி அடிப்படையிலான மசாஜ்கள் போன்றவை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மிகச் சிறந்தவையாக உள்ளன. இது உங்களை சோர்விலிருந்து குணப்படுத்த உதவுகிறது.
7/ 8
நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது: எண்ணற்ற நரம்புகளின் முடிவுகள் பாதங்களில் இணைகின்றன. அவை முதுகெலும்புக்குத் திரும்பிச் செல்கின்றன. அந்த வகையில் நம் இரு கால்களின் உட்புறங்களும் முதுகெலும்புடன் பொருந்தக்கூடியவை. முதுகெலும்பின் மேற்பகுதி பெருவிரலுக்கு கீழே இருக்கும். எனவே, நீங்கள் காலில் அழுத்தம் கொடுத்து சுமார் 30-45 வினாடிகள் வட்ட இயக்கத்தில் தேய்த்து மசாஜ் செய்தால், உங்கள் முதுகெலும்பு புத்துயிர் பெறும்.
8/ 8
தலைவலியிலிருந்து நிவாரணம்: சில நேரங்களில் தலைவலி சைனஸ் பிரச்சனையை உருவாக்குகிறது. ஆனால் உங்கள் இரு கால்களிலும் உள்ள பெருவிரலின் வெளிப்புறத்தில் அழுத்தம் கொடுத்து, பின்னர் ஸ்குவீஸ் மற்றும் ரிலீஸ் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு கால்விரலையும் முன்னும் பின்னும் அசைப்பதன் மூலம், நீங்கள் உடனடியாக வித்தியாசத்தைக் காண்பீர்கள். தலைவலி பிரச்சனை எளிதில் தீரும்.