குளிர்காலம் வந்தாலே போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்கும் நினைப்பு தான் அனைவருக்கும் வரும். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனம் இருக்காது. இப்போதும் நம்மில் பலர் இந்த வேலையைக் கண்டிப்பாக செய்துக்கொண்டு இருப்போம். ஆம் அந்த அளவிற்கு தற்போது குளிர் வாட்டி வதைக்கிறது. பொதுவாக குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக கிடைப்பதால், தசைகள் சுருங்கி விறைப்பாக இருப்பதோடு, வேலை எதுவும் செய்யாமலே உடல் வலியை நாம் உணர்வோம். குளிர்காலத்திற்கு ஏற்ற யோகாசனங்கள்…
ஹஸ்தா உத்தனாசனம் : இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் இரு கால்களை நேராக வைத்து நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக முன்னோக்கி குனிந்து உங்களது கைகள் தரையில் இருக்குமாறு முயற்சிக்க வேண்டும். நன்றாக தலை, கழுத்து, முதுகை வளைத்து நீங்கள் குனிந்து தரையைத் தொட முயற்சியுங்கள். இல்லையென்றால் கால் பெருவிரல்களையாவது தொட வேண்டும். ஒரு 30 வினாடிகள் செய்த பின்னர் மீண்டும் இதை முயற்சி செய்ய வேண்டும். உங்களது உடல் முழுவதும் குனிந்து வளையும் போது, சோம்பல் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை.
பாதஹஸ்தாசனம் : உங்களுடைய கால்களையும், கைகளையும் ஒன்றாக இருக்கும் படியும், முன்னோக்கி வளைந்து நின்று செய்யும் ஆசனம் தான் பாதஹஸ்தாசனம். இந்த ஆசனம் செய்வதற்கு முதலில், உங்களது கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து தலைக்கு மேல் மடிக்காமல் மேலே நீட்டவும். பின்னர் மூச்சை வெளியே விட்டு, மெதுவாக முன்னால் குனிந்து பாதத்திற்கு மேல் இருக்கும் காலை நன்றாக பற்றிக்கொள்ளவும். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் அஜீரண பிரச்சனை, செரிமான மண்டலம் சீராக இயங்குவதற்கு மற்றும் உடல் எடை, தொப்பையை குறைவதற்கு உதவியாக உள்ளது.
உஸ்ட்ராசனா : இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் முட்டியிட்டு உட்கார வேண்டும். பின்னர் உங்களது தலை மற்றும் முதுகை வளைத்து கைகளைப் பின்னால் வளைத்து கால்களைப் பிடிக்க வேண்டும்.இவ்வாறு தினமும் காலையில் செய்வதன் மூலம், தொடைகளில் இருக்கும் கொழுப்புகளைக் குறைக்க உதவுகிறது. முதுகுவலியை சரிசெய்யவும், தோள்களைப் பலப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளதால் காலை நேரத்தில் சோம்பல் இல்லாமல் இருக்க முடியும்.
ஹலசானா : இந்த ஆசனம் செய்வதற்கு முதலில், யோகா மேட்டில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இரு கைகளையும் உடலின் இரு பக்கங்களிலும் ஒட்டி நீட்டிக்கொள்ளவும்.இதனையடுத்து உள்ளங்கைகளை ஊன்றி, இரு கால்களையும் மடக்காமல் நேராக தூக்கி தலைக்குப் பின்புறம் கொண்டு வந்து தரையைத் தொடச் செய்ய வேண்டும்.இவ்வாறு ஹலசானா ஆசனத்தை நீங்கள் மேற்கொள்ளும் போது, உங்களது சுவாசத்தை சீராக வைத்திருக்கவும்., எலும்புகள் வலுப்பெறவும், அடி வயிற்று தசை குறைவது போன்ற பலவற்றிற்கு நன்மை அளிக்கிறது.
புஜங்காசனம் (கோப்ரா போஸ்) : உங்கள் உள்ளங்கைகளை உங்கள் தோள்களுக்கு அடியில் வைத்து உங்கள் வயிற்றில் படுத்திருக்கும் போது உங்கள் கால்களை ஒன்றாகவும், உங்கள் கால்விரல்களை தரையில் வைக்கவும்.முழுமையாக உள்ளிழுத்து , மூச்சைப் பிடித்து , பின்னர் உங்கள் தலை, தோள்கள் மற்றும் உடற்பகுதியை 30 டிகிரி கோணத்தில் உயர்த்தவும்..இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது உடல் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. இதோடு தினமும் முடிந்த வரை நடைப்பயிற்சி, காலையில் அதிக தண்ணீர் குடிப்பது போன்றவற்றை நீங்கள் தினமும் மேற்கொண்டு வந்தாலே குளிரைச் சமாளித்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.