முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா..? உங்களுக்கான ஹோம் ரெமிடிஸ்..!

தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா..? உங்களுக்கான ஹோம் ரெமிடிஸ்..!

தொண்டை வலியால் ஏற்படும் அவஸ்தைகளை சரி செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யப்படும் பாட்டி வைத்திய முறை மருந்தே போதுமானது.

 • 17

  தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா..? உங்களுக்கான ஹோம் ரெமிடிஸ்..!

  தொண்டை வலி என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றுதான், தொண்டை வலியை கட்டுப்படுத்த பல வீட்டு வைத்தியங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில் தொண்டை வலிகளுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சைகளில் ஒன்று ஆப்பிள் சீடர் வினிகர் (ACV) ஆகும். இதில் இன்யூலின் என்ற ப்ரீபயாடிக் உள்ளது, இது உங்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் டி செல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 27

  தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா..? உங்களுக்கான ஹோம் ரெமிடிஸ்..!

  இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது, இது தொற்று கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகர்-ஐப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்... கீழ்காணும் பொருட்களை ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து பயன்படுத்தும்போது நல்ல பலனை காணலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா..? உங்களுக்கான ஹோம் ரெமிடிஸ்..!

  இலவங்கப்பட்டை : ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள், 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும். இந்த இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவக் குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக, பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர். இதனுடைய மணம் மற்றும் தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால் தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 47

  தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா..? உங்களுக்கான ஹோம் ரெமிடிஸ்..!

  தேன்  : ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 2 ஸ்பூன் தேன், கலக்கவும். இதை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தேனில் தேனில் விட்டமின்கள் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம், அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம் போன்ற இதர வகையான சத்துப்பொருள்களும் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 57

  தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா..? உங்களுக்கான ஹோம் ரெமிடிஸ்..!

  பேக்கிங் சோடா  : பேக்கிங் சோடா என்பது சோடியம் பை கார்பனேட் என்ற வேதிப் பொருள். காரத்தன்மை கொண்டது. எளிதில் எல்லா கடைகளிலும் கிடைக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து, ஒரு நாளைக்கு 2-3 முறை வாய் கொப்பளிக்கவும். இதன் மூலம் தொண்டை வலி விரைவில் குணமடையும்.

  MORE
  GALLERIES

 • 67

  தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா..? உங்களுக்கான ஹோம் ரெமிடிஸ்..!

  எலுமிச்சை  : எலுமிச்சம் பழம் பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய்களை குணப்படுத்தும், வாய் நாற்றத்தைப் போக்கும், சரும நோய்களைக் குணப்படுத்தும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண்ணை ஆற்றும், இதேப்போல தொண்டை வலியைப் போக்கும் நல் மருந்தாக எலுமிச்சை பயன்படுகிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிக்கவும். இதனால் தொண்டை வலியில் இருந்து விடுபடலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  தொண்டை வலிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்தலாமா..? உங்களுக்கான ஹோம் ரெமிடிஸ்..!

  கெய்ன் மிளகு  : சிவப்பு மிளகாய் என்று பிரபலமாக அழைக்கப்படும், கெய்ன் மிளகு கேப்சிகம் குடும்பத்தை சேர்ந்தது ஆகும். கெய்ன் மிளகு பல ஊட்டச்சத்து பண்புகளை கொண்டுள்ளது, இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. கெய்ன் மிளகில் காப்சைசின் உள்ளது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், 1 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், 1 ஸ்பூன் கெய்ன் மிளகு மற்றும் 2 ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் தொண்டை வலி பிரச்சினைகளில் இருந்து நல்ல பலன் கிடைக்கும்.

  MORE
  GALLERIES