ஏன் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம்..? இது மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை அனுப்புகிறது. இது உடலுக்கு ஆக்ஸிஜன் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்கிறது. இதயம் பம்ப் செய்வதை நிறுத்தினால், மூளையில் தொடங்கி உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளும் செயலிழந்துவிடும். எனவே நம் இதயத்தை கவனித்துக்கொள்வது அவசியம்.எனவே ஒருவர் தங்கள் இதயத்தை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்..? அதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன பார்க்கலாம்.
1. ஆரோக்கியமான உணவுப்பழக்கம் : ஆராய்ச்சியில் பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய உணவு நம் இதயத்தை வலுவாக வைத்திருக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை இறைச்சி உணவுகளை மிதமாக சாப்பிடுவது நல்லது. ஆனால் சிவப்பு இறைச்சி அல்லது கொழுப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் தமனிகளில் கொழுப்பு படிவத்தை உருவாக்குகிறது. இதனால் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
சரியான உடற்பயிற்சி : உடற்பயிற்சி எடையை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் உடல் பருமனை சமாளிக்க உதவுகிறது. ஜாகிங், ஓட்டப்பயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற கார்டியோ பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கின்றன. அவை நமது இரத்த நாளங்களை வலுப்படுத்துவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன மற்றும் இதயத்திற்கு அதிக ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவுகின்றன. அதேசயம் அதிக உடற்பயிற்சியையும் தவிருங்கள். ஏனெனில் அது இதய தசைகள் மற்றும் தமனிகளில் அழுத்தம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை உருவாக்கும்.
3. மன அழுத்தத்தைக் குறைக்கவும் : மன அழுத்தத்தின்போது மனித உடலில் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனை அதிகரிக்கச் செய்கின்றன. கார்டிசோல் இரத்த அழுத்தம், கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது. இது இதய நோயையும் ஏற்படுத்தும். தியானம், ஆழ்ந்த சுவாசம், உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவுமுறை, சரியான தூக்கம் மற்றும் சுய ஆலோசனை போன்ற விஷயங்களை பின்பற்றுவது இதயத்தை அழுத்தமில்லாமல் வைத்திருக்கும்.
4. புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்துங்கள் : புகைபிடித்தல் கரோனரி இதய நோய் மற்றும் திடீர் மரணத்தின் அபாயத்தில் 70 சதவீதத்திற்கு காரணமாக அமைகிறது. புகைபிடித்தல் தமனிகளை பாதித்து நேரடியாக இதயத்தையும் பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள நிகோடின் மற்றும் கார்பன் மோனாக்சைடு இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் குறைத்து, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, சிகரெட் மற்றும் நிகோடின் vapes ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது அல்லது நிறுத்துவது அவசியம்.