முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்கள் உடல் எடை திடீரென குறையுதா..? இந்த 5 பிரச்சனை இருக்கானு செக் பண்ணுங்க..!

உங்கள் உடல் எடை திடீரென குறையுதா..? இந்த 5 பிரச்சனை இருக்கானு செக் பண்ணுங்க..!

இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைப்பதற்கு என்னென்னமோ முயற்சிகளை செய்து வருகின்றனர். சிலருக்கு எதுவும் செய்யாமலேயே உடல் எடையானது திடீரென குறைய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் மற்றவர்கள் உங்களை பார்த்து ஆச்சரியப்படலாம்.

 • 17

  உங்கள் உடல் எடை திடீரென குறையுதா..? இந்த 5 பிரச்சனை இருக்கானு செக் பண்ணுங்க..!

  இன்றைய காலத்தில் பலரும் உடல் எடையை குறைப்பதற்கு என்னென்னமோ முயற்சிகளை செய்து வருகின்றனர். சிலருக்கு எதுவும் செய்யாமலேயே உடல் எடையானது திடீரென குறைய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் மற்றவர்கள் உங்களை பார்த்து ஆச்சரியப்படலாம். ஆனால் உங்கள் உடல் எடை குறையும் போது அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் முக்கியம்.

  MORE
  GALLERIES

 • 27

  உங்கள் உடல் எடை திடீரென குறையுதா..? இந்த 5 பிரச்சனை இருக்கானு செக் பண்ணுங்க..!

  உடல் எடை குறைவதில் இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது நாமே விரும்பி உடல் எடையை குறைப்பது. மற்றொன்று உடல் எடை தானாக குறைவது. இதில் இரண்டாவது வகை சற்று ஆபத்தானதாகும். திடீரென காரணமே இல்லாமல் உடல் எடை குறைவது என்பது கண்டிப்பாக நல்ல அறிகுறி அல்ல. பெரும்பாலும் திடீரென உடல் எடை குறைவதற்கு காரணம் உடலில் நிலை சரியாக இல்லாததற்கான அறிகுறியாகும். எனவே இந்த பதிவில் திடீரென உடல் எடை குறைவதற்கான 5 பொதுவான காரணங்களை பற்றி பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 37

  உங்கள் உடல் எடை திடீரென குறையுதா..? இந்த 5 பிரச்சனை இருக்கானு செக் பண்ணுங்க..!

  மன அழுத்தம் : மன அழுத்தத்தின் மூலம் உடல் எடை குறைவது என்பது இயற்கையான ஒன்று. உடல் அளவில் நீங்கள் அதிகமான வேலை எதுவும் செய்யாமலேயே உங்கள் உடல் எடை குறைவதை நீங்கள் உணர்ந்தால் உங்கள் மனநிலையை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெரும்பாலும் மன அழுத்தத்தினால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல் உடலும் மிகவும் பலவீனமாக மாறிவிடும்.

  MORE
  GALLERIES

 • 47

  உங்கள் உடல் எடை திடீரென குறையுதா..? இந்த 5 பிரச்சனை இருக்கானு செக் பண்ணுங்க..!

  சர்க்கரை வியாதி : சர்க்கரை நோய் பாதித்த நோயாளிகளுக்கு பெரும்பாலும் திடீரென உடல் எடையானது குறையும். தற்போது இளம் வயதினர் கூட சக்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 57

  உங்கள் உடல் எடை திடீரென குறையுதா..? இந்த 5 பிரச்சனை இருக்கானு செக் பண்ணுங்க..!

  புற்றுநோய்: அறிவியல் ஆராய்ச்சிகளின் படி புற்றுநோய் பாதித்த ஒருவருக்கு திடீரென உடல் எடையானது குறையும். புற்றுநோய் பாதிப்பிற்குள்ளான ஒரு நபர் கிட்டத்தட்ட 1௦ கிலோ வரை எடை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலும் உடல் எடை குறைவது தான் புற்று நோய் தாக்கியுள்ளதற்கான முதல் அறிகுறியும் ஆகும் என்பதை நினைவில் கொள்க.

  MORE
  GALLERIES

 • 67

  உங்கள் உடல் எடை திடீரென குறையுதா..? இந்த 5 பிரச்சனை இருக்கானு செக் பண்ணுங்க..!

  செரிமான கோளாறு: உண்ணும் உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை இருந்தால் உடல் எடையானது குறையும். ஏனெனில் உணவு சரியாக செரிக்காத காரணத்தினால் அவற்றில் உள்ள சத்துக்கள் உடைக்கப்பட்டு, உடலில் உள்ள செல்களுக்கு கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. இதைத் தவிர வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஆகியவையும் உடல் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளன.

  MORE
  GALLERIES

 • 77

  உங்கள் உடல் எடை திடீரென குறையுதா..? இந்த 5 பிரச்சனை இருக்கானு செக் பண்ணுங்க..!

  சிறுநீரக கோளாறு: சிறுநீரகம் உடலின் செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தேவையான பணிகளை செய்வதில் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒருவேளை சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கண்டிப்பாக உடல் எடை குறைவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமையும்.

  MORE
  GALLERIES