அல்சைமர் என்பது முதியவர்களுக்கு ஏற்படும் நரம்பியல் சார்ந்த ஒரு நோயாகும். இன்றைக்கு முதியவர்களுக்கு மட்டுமில்லை இளம் வயதினரையும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கான வாழ்நாள் அதிகம் என்பதால் இந்நோயின் தாக்குதல் அவர்களுக்குத் தான் அதிகளவில் ஏற்படுகிறது. அடிக்கடி தலையில் அடிபடுதல், கடும் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் அனைத்தும் அல்சைமர் நோய்க்குக் காரணமாக அமைகிறது. எனவே இந்நேரத்தில் அல்சைமர் பாதிப்பைத் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்.
அல்சைமர் நோயைத் தடுக்கவும் வழிமுறைகள்… புகைப்பிடிப்பதை நிறுத்துதல் : புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது பல நோய்களுக்கு திறவுகோலாக அமைகிறது. அதிகமாக புகைப்பிடிக்கும் போது நமது உடலில் உள்ள பாகங்கள் படிப்படியாக செயலிழக்கத் தொடங்குகிறது. எனவே தான் அல்சைமர் நோயைத் தடுக்க புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்தி விட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் மூளையின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைப்பதோடு, இதயம் மற்றும் மூளையில் உள்ள இரத்த நாளங்களின் சுருக்கத்தை குறைக்கிறது.
மது குடிக்கும் பழக்கத்தைக்குறைத்தல் : உடலில் அதிகளவு ஆல்கஹால் செல்லும் போது பலவிதமான நோய்களைச் சந்திக்க நேரிடும். மேலும் உடல் நலப்பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது. எனவே மறதி எனப்படும் அல்சைமர் நோயைப் பாதுகாக்க மது குடிக்கும் பழக்கத்தைக் குறைக்க வேண்டும்.
ஆரோக்கியமான சமச்சீர் உணவுகள் : பொதுவாக வயதானவர்களைத் தான் அல்சைமர் நோய் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவதற்காகத் தான் ஆரம்ப முதலே நம்முடைய வாழ்க்கையில் ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் புரதம் நிறைந்த உணவுப் பொருள்களை நாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் உடலில் நீரழிவு மற்றும் சிறுநீரக பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இதோடு உயரத்திற்கு ஏற்ற எடையையும் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது அவசியம். இவ்வாறு நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, சிறந்த நினைவாற்றல், மூளைச் சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
உடற்பயிற்சி செய்தல் : நம்முடைய வாழ்க்கையில் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்தாலே எந்தவொரு நோயும் நம்மை அண்டாது. எனவே இதை மட்டும் நீங்கள் ஒரு போதும் நிறுத்தக்கூடாது. குறிப்பாக அல்சைமர் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், தினமும் சைக்கிள் ஓட்டுதல், வாக்கிங் போன்ற ஏரோபிக் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இது உங்களின் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. மேலும் நினைவாற்றல் உருவாக்கத்துடன் தொடர்புடைய மூளைப் பகுதியின் அளவை அதிகரிக்கிறது.
வழக்கமான உடல் நல பரிசோதனை : வயதானவர்களுக்கு வரக்கூடிய அல்சைமர் நோயைத் தடுக்க முடியாது. இருந்தப் போதும் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் வழக்கமான உடல் நல பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முன்கூட்டியே வரக்கூடிய உடல் நலப்பிரச்சனைகளை நீங்கள் தெரிந்துக் கொள்ள முடியும். இதுப்போன்ற வழிமுறைகளை நீங்கள் மேற்கொண்டாலே அல்சைமர் நோயின் பாதிப்பைத் தடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.