முகப்பு » புகைப்பட செய்தி » கோடைக்கால உடல் உஷ்ணம் விந்தணுக்களை பாதிக்குமா..? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 டிப்ஸ்..!

கோடைக்கால உடல் உஷ்ணம் விந்தணுக்களை பாதிக்குமா..? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 டிப்ஸ்..!

விதைப்பைகளும் அதிக உஷ்ணத்திற்கு உள்ளாகும். குறிப்பாக வேலைக் காரணமாக வெயிலில் வெளியே சுற்றும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை தவிர்க்க முடியாதது.

 • 17

  கோடைக்கால உடல் உஷ்ணம் விந்தணுக்களை பாதிக்குமா..? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 டிப்ஸ்..!

  ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் கருவுறுதல் சிக்கலின்றி இருக்கும். எனவே அதற்கு இடையூறு இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவதும் அவசியம். பொதுவாக விந்தணுக்கள் அதிக வெப்பத்தை தாங்காது. அதனால்தால் விந்தணு உற்பத்திக்கு இடையூறு இல்லாத வகையில் எப்போதும் குளுர்ச்சியாக இருக்க விதைப்பை வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. உடல் வெப்பநிலையைக் காட்டிலும் மூன்று முதல் 4 டிகிரிக்கும் குறைவாகவே விந்தணுக்களின் வெப்பநிலை இருக்க வேண்டும். அதற்கு மேல் தாண்டினால் ஆண்களின் விந்தணுக்கள் பாதிக்கப்படும். அதோடு அவர்களின் கருவுறுதல் தன்மையும் பாதிக்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 27

  கோடைக்கால உடல் உஷ்ணம் விந்தணுக்களை பாதிக்குமா..? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 டிப்ஸ்..!

  இந்த விந்தணு வெப்பநிலை அதிகரிப்பு பிரச்சனை கோடைக்காலத்தில் அதிகமாக இருக்கும். பொதுவாக உடல் அதிக உஷ்ணத்தை எதிர்கொள்கிறது எனில் விதைப்பைகளும் அதிக உஷ்ணத்திற்கு உள்ளாகும். குறிப்பாக வேலைக் காரணமாக வெயிலில் வெளியே சுற்றும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை தவிர்க்க முடியாதது. அதோடு கோடை வெப்பத்தோடு , ஹோட்டலில் சமையல் வேலை, வெல்டிங் வேலை என நெருப்பு, தீ சார்ந்த வேலைகளில் இருப்போருக்கு இந்த பிரச்சனை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என மருத்துவர்களே எச்சரிக்கின்றனர். எனவே கோடைக்காலத்தில் உடல் வெப்பத்தை தனித்தாலே இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். அதோடு இந்த டிப்ஸையும் மறக்காமல் ஃபாலோ பண்ணுங்க.

  MORE
  GALLERIES

 • 37

  கோடைக்கால உடல் உஷ்ணம் விந்தணுக்களை பாதிக்குமா..? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 டிப்ஸ்..!

  சூடான குளியலை தவிர்க்கவும் : பொதுவாக வெயில் நாட்களில் சூடான குளியலை விரும்ப மாட்டார்கள். இருப்பினும் சிலர் வெந்நீரில் குளித்து பழகியிருந்தால் கோடையிலும் அது தொடரும். முடிந்த வரை கோடைக்காலத்திலாவது இந்த பழக்கத்தை மாற்றிக்கொண்டால் உங்கள் விந்தணு வெப்பத்தால் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம். அதோடு வெயில் சூட்டால் குழாய் நீர் அதிக வெப்பத்துடனே வரும். அதை தவிர்க்கவும் முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் இரவோ அல்லது காலையிலோ தண்ணீர் பிடித்து வைத்து குளிக்கும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  கோடைக்கால உடல் உஷ்ணம் விந்தணுக்களை பாதிக்குமா..? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 டிப்ஸ்..!

  இறுக்கமான உள்ளாடை மற்றும் ஆடைகளை தவிர்க்கவும் : தினமும் இறுக்கமான ஜீன்ஸ், பேண்ட் மற்றும் உள்ளாடைகள் அணிவது உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாததால் விந்தணுக்களின் வெப்பம் அதிகரிக்கும். எனவே இறுக்கமான உடைகளை தவிர்க்கவும். குறிப்பாக கோடைக்காலத்தில் தளர்வான ஆடைகள், காற்றோட்டமான உள்ளாடைகளை அணிவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 57

  கோடைக்கால உடல் உஷ்ணம் விந்தணுக்களை பாதிக்குமா..? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 டிப்ஸ்..!

  நீண்ட நேரம் அமர்வதை தவிர்க்கவும் : நீங்கள் வேலையில் நீண்ட நேரம் அமர்ந்தே இருக்கிறீர்கள் எனில் அதுவும் உங்கள் விந்தணுவின் வெப்பநிலையை அதிகரிக்கும். நீங்கள் நீண்ட நேரம் படம் பார்க்கவோ அல்லது வேலைக் காரணமாகவோ நீண்ட நேரம் அமரும்போது விதைப்பைகளை சுற்றிலும் வெப்பம் அதிகரிக்கும். இதனால் ஆண்களின் கருத்தரித்தல் தன்மை பாதிக்கப்படும். எனவே வேலைக்கு இடையே சிறிது நேரம் நடப்பது அல்லது அமர்ந்த இடத்திலேயே 5 நிமிடம் எழுந்து நின்று பின் அமர்வது என செய்தால் வெப்பமாவதை தவிர்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  கோடைக்கால உடல் உஷ்ணம் விந்தணுக்களை பாதிக்குமா..? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 டிப்ஸ்..!

  நீண்ட தூர பைக் பயணத்தை தவிர்க்கவும் : நீங்கள் நீண்ட தூரம் பைக் ஓட்டும் சூழ்நிலை இருப்பின் அதுவும் உங்கள் விந்தணு உஷ்ணத்திற்கு காரணமாக அமையும். ஏனெனில் விதைப்பைகளுக்கு உராய்வு மற்றும் அழுத்தம் அதிகரிப்பதால் வெப்பம் அதிகரிக்கும். எனவே முடிந்தால் அவ்வபோது பைக்கை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்தபின் செல்லலாம். பைக் ஓட்டும்போது இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  கோடைக்கால உடல் உஷ்ணம் விந்தணுக்களை பாதிக்குமா..? இதிலிருந்து தப்பிக்க நீங்கள் செய்ய வேண்டிய 5 டிப்ஸ்..!

  லாப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துவதை தவிர்க்கவும் : லாப்டாப் பேட்டரி அதிக வெப்பத்தை வெளியிடும். எனவே லாப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்யும்போது விதைப்பைகளின் வெப்பத்தையும் அதிகரிக்கச் செய்யும். எனவே விந்தணுக்களின் தரத்தை பாதிக்கும். எனவே லாப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வதை தவிருங்கள்.

  MORE
  GALLERIES