முகப்பு » புகைப்பட செய்தி » பெண்கள் பிறப்புறுப்பின் மீது ஏன் கட்டிகள் ஏற்படுகின்றன..? உங்களுக்கான 5 காரணங்கள்..!

பெண்கள் பிறப்புறுப்பின் மீது ஏன் கட்டிகள் ஏற்படுகின்றன..? உங்களுக்கான 5 காரணங்கள்..!

வஜைனாவின் மீது கட்டிகள் ஏற்படுவதற்கு அதிக வெப்பம், இறுக்கமான உள்ளாடை, சுகாதாரமற்ற தன்மை போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம்..

 • 16

  பெண்கள் பிறப்புறுப்பின் மீது ஏன் கட்டிகள் ஏற்படுகின்றன..? உங்களுக்கான 5 காரணங்கள்..!

  உடலின் பல்வேறு இடங்களில் தோன்றும் கட்டிகள், கொப்புளங்கள், தடிப்புகள், போன்றவை பெண்ணுறுப்பின் மீதும் ஏற்படும். குறிப்பாக, சிறுசிறு கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் போன்ற புடைப்புகள் வஜைனாவின் மீது ஏற்படும். கட்டிகளும், தடிப்புகளும் பெரிய அளவில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதிக வெப்பம், இறுக்கமான உள்ளாடை, சுகாதாரமற்ற தன்மை போன்றவை இதற்கு காரணமாகக் கூறப்படுகின்றன. சில நேரங்களில் பாலியல் நோய்த்தொற்றின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இதைப் பற்றி முழுமையாக இங்கே பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  பெண்கள் பிறப்புறுப்பின் மீது ஏன் கட்டிகள் ஏற்படுகின்றன..? உங்களுக்கான 5 காரணங்கள்..!

  மரு (skin tags) : பாலிப்ஸ் அல்லது ஸ்கின் tags என்று கூறப்படும் மரு கழுத்து, அக்குள், முதுகுப் பகுதிகளில் மட்டுமல்லாமல், கூடுதல் ஸ்கின் இருக்கும் இடங்களில் சிறிய அளவில் புடைப்புகலாக வெளிப்படும். கூடுதல் சரும லேயர், ஒன்றோடொன்று உரசி எரிச்சலை ஏற்படுத்தி, மருவாக மாறும். ஆனால், மருவால் வேறு எந்த பாதிப்பும் இல்லை. மருத்துவரை அணுகி லேசர் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  பெண்கள் பிறப்புறுப்பின் மீது ஏன் கட்டிகள் ஏற்படுகின்றன..? உங்களுக்கான 5 காரணங்கள்..!

  முடி நீக்கும் சிகிச்சையால் ஏற்படும் பாதிப்பு  (ingrown hair) : பொதுவாக உடலின் அந்தரங்கப் பகுதிகளில் இருக்கும் முடியை நீக்க ஷேவிங், அல்லது வாக்சிங் செய்யலாம். அவ்வாறு பிறப்புறுப்புப் பகுதிகளில் செய்யும் போது, வேரிலிருந்து முழுமையாக நீக்க முடியாமல் ingrown hair பிரச்சனை ஏற்படும். இதனால் சென்சிடிவ்வான பிறப்புறுப்பு சருமத்தில் இந்த ingrown hair மிகச்சிறிய அளவில் கட்டிகளை உருவாக்கும். இது எரிச்சல், அரிப்பு, அசௌகரியம் ஆகியவற்றை உண்டாக்கும். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சருமம் கருமை நிறத்தில் மாறும், லேசாக வீங்கி, சில நேரங்களில் சீழ் பிடிக்கும் அபாயம் ஏற்படும்.

  MORE
  GALLERIES

 • 46

  பெண்கள் பிறப்புறுப்பின் மீது ஏன் கட்டிகள் ஏற்படுகின்றன..? உங்களுக்கான 5 காரணங்கள்..!

  ஜெனிட்டல் வார்ட்ஸ் (Genital warts) : ஜெனிட்டல் வார்ட்ஸ் என்பது பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய தொற்று ஆகும். இது ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படலாம். சிறிய அளவிலான, நிறமில்லாத முகப்பரு போல தோறும் கட்டிகள் இருந்தால் அது HPV தொற்று ஆகும். நீங்கள் கவனிக்காமல் விட்ட அந்த தொற்று தான் வார்ட்ஸ் ஆக மாறியுள்ளது. இதற்கு உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  பெண்கள் பிறப்புறுப்பின் மீது ஏன் கட்டிகள் ஏற்படுகின்றன..? உங்களுக்கான 5 காரணங்கள்..!

  ஜெனிட்டல் ஹெர்பஸ் (genital Herpes) : இதுவும் ஒரு வகையான வைரஸ் தொற்று தான். இந்த வைரஸ் பாலியல் உறவின் மூலம் பரவலாம். சீழ் நிறைந்த கட்டிகள் அல்லது நீர் வடியும் அல்சர் போன்றவை இதற்கான அறிகுறிகளாகும். வலி நிறைந்த அல்லது எரிச்சலூட்டும், அரிக்கும் கட்டிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும்.

  MORE
  GALLERIES

 • 66

  பெண்கள் பிறப்புறுப்பின் மீது ஏன் கட்டிகள் ஏற்படுகின்றன..? உங்களுக்கான 5 காரணங்கள்..!

  பிறப்புறுப்பில் பரு (vaginal acne) : முகத்தில், கழுத்துப் பகுதிகளில், முதுகுப் பகுதிகளில் தோன்றும் பருக்கள் போல பிறப்புறுப்பிலும் பருக்கள் தோன்றும். சிவப்பு நிறத்தில், வீக்கமாக, புடைப்பு போல காணப்படும்.

  MORE
  GALLERIES