இளமை என்பது இயற்கையின் கொடையாக இருந்தாலும் வயதாகும் செயல்முறை என்பதும் இயற்கையானது. இத தவிர்க்க முடியாது. குறிப்பாக பெண்கள் 30 வயதை கடந்த பிறகு தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் எடுக்கும் சில நடவடிக்கைகள் பெண்கள் தங்கள் 30-களில் இருக்கும் போது ஆரோக்கியமாக மற்றும் அழகாக இருக்க உதவும். எனவே 30 வயதை கடந்த பிறகு பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய சில முக்கிய பரிசோதனைகள் பற்றி இங்கே கூறுகிறார் பிரபல மகப்பேறு மருத்துவரான கீதா மோனப்பா.
இளமை என்பது இயற்கையின் கொடையாக இருந்தாலும் வயதாகும் செயல்முறை என்பதும் இயற்கையானது. இத தவிர்க்க முடியாது. குறிப்பாக பெண்கள் 30 வயதை கடந்த பிறகு தங்களது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் எடுக்கும் சில நடவடிக்கைகள் பெண்கள் தங்கள் 30-களில் இருக்கும் போது ஆரோக்கியமாக மற்றும் அழகாக இருக்க உதவும். எனவே 30 வயதை கடந்த பிறகு பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய சில முக்கிய பரிசோதனைகள் பற்றி இங்கே கூறுகிறார் பிரபல மகப்பேறு மருத்துவரான கீதா மோனப்பா.
பிஏபி ஸ்மியர் (PAP smear) : பெண்களுக்கு செர்விக்கல் கேன்சர் (cervical cancer) அதாவது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை கண்டறிய இந்த பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. ஒரு PAP smear பரிசோதனையானது நோய்த்தொற்றுகள் அல்லது வீக்கம் போன்ற பிற நிலைமைகளை கண்டறியவும் உதவும். 21 முதல் 65 வயதுடைய பெண்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இந்த PAP smear டெஸ்ட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கீதா மோனப்பா.
எச்பிவி டெஸ்ட்டிங் (HPV testing): இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று அறியப்படும் சில வகையான HPV-லிருந்து DNA அல்லது RNA-க்காக செல்கள் சோதிக்கப்படும் ஒரு ஆய்வக சோதனையாகும். 30 வயதிற்கு பின் கர்ப்பப்பை வாய்புற்றுநோயை உருவாக்கும். அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்கு சிறந்த கண்டறிதலுக்கான PAP smear டெஸ்ட்டுடன் HPV டெஸ்ட்டும் செய்து கொள்ளலாம். 25 வயதில் துவங்கி 65 வயது வரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை HPV பரிசோதனையை பெண்கள் செய்து கொள்ளலாம்.
மேமோகிராம் (Mammogram): 30 வயதிற்கு பிறகு பெண்கள் மருத்துவ நிபுணரிடம் சென்று வருடாந்திர அடிப்படையில் ஒரு மேமோகிராம் மற்றும் பிரெஸ்ட் MRI டெஸ்ட் செய்து கொள்வதன் மூலம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி பரிந்துரைக்கிறது. BRCA 1 மற்றும் 2 மியூட்டேஷன்ஸ் அல்லது ஃபர்ஸ்ட் டிகிரி ரிலேட்டிவில் உள்ள மியூட்டேஷன்ஸ் போன்ற மார்பக புற்றுநோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ள பெண்கள் 30 வயதிற்கு பிறகு மேமோகிராம் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோயின் சராசரி ஆபத்து உள்ள பெண்கள் 30 வயதில் இல்லாவிட்டாலும் 40 வயதிற்குள் மேமோகிராம் பரிசோதனை செய்ய ஆரம்பிக்கலாம். 45 வயதிலிருந்து கண்டிப்பாக வருடாந்திர அடிப்படையில் மேமோகிராம் செய்து கொள்ளும் வழக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.
ஃபெர்டிலிட்டி & ப்ரீ-ப்ரக்னன்சி எவால்யுவேஷன் (Fertility and pre-pregnancy evaluation): ஃபெர்டிலிட்டியை மதிப்பிட மகளிர் மருத்துவ நிபுணருடன் கலந்தாலோசிக்க 30 என்பது சரியான வயது. ஓவரியன் ரிஸர்வ்ஸ் அல்லது கருப்பையில் உள்ள முட்டைகளின் எண்ணிக்கை ஒரு பெண்ணின் 20-களின் பிற்பகுதியில் குறைகிறது, 30-களின் பிற்பகுதியில் இன்னும் கடுமையாக குறைகிறது. வயதை பொருட்படுத்தாமல் கர்ப்பம் தரிக்க திட்டமிடும் அனைத்து பெண்களும் pre pregnancy டெஸ்ட் செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு பெண் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு தயாராக இருக்கிறார்களா அல்லது கர்ப்பத்திற்கு முன் அவர்களது உடலில் உள்ள சர்க்கரை அல்லது தைராய்டு அளவுகள் சரி செய்யப்பட வேண்டுமா என்பதை கண்டறியும் சில சோதனைகள் இதில் அடங்கும்.
கருத்தரிக்க முயற்சிக்கும் முன் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், ரூபெல்லா தடுப்பூசியை ஒரு பெண்ணுக்கு மருத்துவர் பரிந்துரைக்கலாம். டவுன்ஸ் நோய்க்குறியின் (Down’s Syndrome) வயது தொடர்பான ஆபத்துகள் மற்றும் கர்ப்பத்தை சிக்கலாக்கும் மருத்துவ நிலைமைகள் பற்றிய விவரங்கள், ஆரம்பகால கண்டறிதல் மற்றும் கருத்தரிக்கும் சிகிச்சைக்கான விருப்பங்களைப் பற்றிய சிறந்த புரிதலை ஒரு பெண்ணுக்கு வழங்கும்.
லிப்பிட் ப்ரொஃபைல் (Lipid profile): ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் போது, 20 வயது முதல் ஒவ்வொரு 4-6 வருடங்களுக்கும் ஒருமுறை இந்த லிப்பிட் ப்ரொஃபைல் டெஸ்ட்டை செய்து கொள்ள அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது. லிப்பிட் ப்ரொஃபைல் என்பது கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்ற கொழுப்புகளில் உள்ள அசாதாரணங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் ரத்த பரிசோதனைகளின் குழு ஆகும்.
தைராய்டு ஃபங்க்ஷன் டெஸ்டஸ் & கம்ப்ளீட் ஹீமோகிராம் (Thyroid function tests and complete hemogram): லேசான ரத்த சோகை மற்றும் க்ளினிக்கல் ஹைப்போ தைராய்டிசம் அறிகுறிகளை அரிதாகவே காண்பிக்கும். எனவே பெண்கள் தங்களின் ஹீமோகுளோபின் மற்றும் உங்கள் தைராய்டு ப்ரொஃபைலை அறிந்து கொள்வது ஆரம்பகால கண்டறிதல், சரியான நேர சிகிச்சை மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் நிபுணருடன் கலந்தாலோசித்து மேற்காணும் டெஸ்ட்களை எடுத்து கொள்வது ஆரோக்கியமாக வாழ உதவும்.