உடல் எடையை குறைப்பவர்கள் டயட் விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துவதுண்டு. அவர்கள் சாப்பிடும் உணவு எந்த விதத்திலும் உடல் எடையை அதிகரிக்க காரணமாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். இதனால் பால் கலந்த டீயைக் கூட தவிர்த்துவிடுவார்கள். அவர்களுக்காகவே இந்த 5 வகை டீ பரிந்துரைக்கப்படுகிறது. இவை உங்கள் உடல் எடை குறைக்கும் முயற்சியை மேலும் எளிதாக்கும்.
ஸ்டார் பூ டீ : , சீனாவை பூர்வீகமாகக் கொண்டதுதான் ஸ்டார் பூ. செரிமான பிரச்சனைகளான வயிற்றுக்கோளாறு, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவற்றின் சிகிச்சைக்கு இதை பயன்படுத்தப்படலாம். இந்த ஸ்டார் பூவை ஒரு கப் சூடான நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து பின் இதை வடிகட்டி குடிக்கலாம். தேவைப்பட்டால் தேன் கலந்துகொள்ளலாம்.. வயிற்றில் கோளாறு ஏற்படும் போது இதை பருகவும்.
பெப்பர்மின்ட் டீ : பெப்பர்மின்ட் நீங்கள் அதிக அளவு சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை கிரீன் டீ யுடன் கலந்து கொதிக்க வைத்து குடித்தால் செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. மேலும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. பெப்பர்மின்ட் இலைகள், புத்துணர்ச்சியூட்டும் தேநீர் எனலாம், அதை சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ குடிக்கலாம். தேநீர் தயாரிக்க, ஒரு தேக்கரண்டி புதிய அல்லது உலர்ந்த இலைகளை எடுத்து, அவற்றை கொதிக்கும் நீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் வடிகட்டி குடிக்கவும்.
கிரீன் டீ : கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
உடலின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் கிரீன் டீயில் காணப்படும் EGCG என்ற வேதிப்பொருள், கொழுப்பை குறைக்க உதவுவதாக ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது . இது ஒரு நாளைக்கு 70 கலோரிகளை எரிக்கும் என்கிறது. கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவையும் அதிகரிக்கிறது.
ரோஸ் டீ: ரோஸ் டீ மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. கிடைக்கக்கூடிய பழமையான சுவையூட்டும் டீக்களில் ஒன்று ரோஸ் டீ . இது நச்சுகளை நீக்கி, சருமத்தை அழகுபடுத்துவதைத் தவிர, ரோஸ் டீயில் வைட்டமின்கள் ஏ, பி3, சி, டி மற்றும் ஈ ஆகியவை உள்ளன மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக செயல்படுவதாக அறியப்படுகிறது. இது மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.