முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வெயில் காலத்தில் நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

வெயில் காலத்தில் நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

கடுமையான வெப்ப தாக்கத்தைத் தவிர்ப்பதற்கும், உங்கள் செல்ல நண்பரைப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்கவும், கோடையில் நீங்கள் உங்கள் நாயுடன் வாக்கிங் செல்லும் நேரத்தைக் கணக்கிடுவது முக்கியம்.

 • 17

  வெயில் காலத்தில் நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

  கோடைக் காலம் நமக்கு மட்டும் அல்ல, நம் செல்லப் பிராணிகளுக்கும் இடையூறாகத் தான் இருக்கும். அதனால் உங்கள் செல்ல நாய்க் குட்டிக்கும் கோடையை சமாளிப்பது மிகவும் கடினமாகத் தான் இருக்கும் என்பதால், நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 27

  வெயில் காலத்தில் நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

  கோடைக் காலம் வந்தாலே நம்மை வெயில் வாட்டி வதைத்து விடும். இது நமக்கு மட்டுமல்ல, நம் செல்லப் பிராணிகளுக்கும் பொருந்தும். கோடைக் காலத்தில் நாய்கள் அதிகப்படியான வெப்பம் காரணாமாக சோர்வு அல்லது வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்படலாம். எனவே, ஒரு பொறுப்புள்ள நாய் உரிமையாளராக, நீங்கள் உங்கள் செல்லப்பிராணியை வாக்கிங் கூட்டிக் கொண்டு செல்லும் போது, அவை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் இருப்பதை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். பின்வரும் சில எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் வாலாட்டும் உங்கள் செல்ல நண்பர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை நீங்கள் உறுதிசெய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  வெயில் காலத்தில் நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

  நிழலில் நடக்கவும் :  வெயில் காலத்தில் நீங்கள் உங்கள் செல்லப் பிராணி அதிக வெயிலுக்கு உட்படாதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வாக்கிங் செல்லும் போது, நீங்கள் சற்று நிழல் இருப்பது போன்ற வழியில் நடப்பது நல்லது. ஏனென்றால், நாய்களையும் வெப்ப பக்கவதாம் தாக்கலாம். உங்கள் நாய்க்கு வெளிர் நிற ரோமங்கள் அல்லது மென்மையான சருமம் இருந்தால், அதன் மூக்கு மற்றும் காதுகளில் பாதுகாப்புக்கு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  வெயில் காலத்தில் நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

  வெப்பம் மிகுந்த மேற்பரப்பில் இருந்து அதன் பாதங்களைப் பாதுகாக்கவும்  : உங்கள் செல்லப் பிராணியை வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, ​​வெப்பம் மிகுந்த சாலைகளில் நடப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக புல் நிறைந்த நடைபாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெப்பம் மிகுந்தமேற்பரப்புகள் தீக்காயங்களை ஏற்படுத்தலாம். அதோடு, அது உங்கள் நாயின் பாதங்களை சேதப்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நடைபாதையின் வெப்பநிலையை சரிபார்க்க, நீங்கள் கையை வைத்து சோதித்துப் பார்க்கலாம். உங்களுக்கு சூடு பொறுக்க முடியவில்லை என்றால், அது உங்கள் நாயின் பாதங்களுக்கும் உகந்ததாக இருக்காது.

  MORE
  GALLERIES

 • 57

  வெயில் காலத்தில் நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

  எப்பொழுதும் தண்ணீரைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்  : எங்கு சென்றாலும் நமக்கு தண்ணீர் எடுத்து செல்வது போல, நம் செல்லப் பிராணிகளுக்கும் போதிய தண்ணீர் எடுத்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஆம், கோடைக் காலத்தில் நீரேற்றமாக இருக்க நாய்களுக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படும். அதனால் வாக்கிங் செல்லும் போது தண்ணீருடன் ஒரு கிண்ணம் எடுத்துச் செல்லுங்கள். நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க நடைப்பயணத்தின் போது உங்கள் நாய் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 67

  வெயில் காலத்தில் நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

  வேகத்தை அவ்வப்போது கவனத்தில் கொள்ளவும்  : வேகமாக நடப்பது உங்களுக்கும் உங்கள் நாய்க்கும் சுவாரஸ்யமாக இருக்கலாம், ஆனால் கோடைக் காலத்தில் மெதுவாகச் செல்வது அவசியம். அதிக வெப்பம் மற்றும் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க நிதானமாக, அதாவது மிதமான வேகத்தில் நடந்து செல்லுங்கள். இது உங்கள் நாய்க்கு முகர்ந்து பார்க்கவும் அதன் சுற்றுப்புறங்களை ஆராயவும் வாய்ப்பளிக்கும். அதே போல், நடக்கும் போது, இடைவெளிகளை எடுத்துக்கொள்வது, உங்கள் நாயின் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  வெயில் காலத்தில் நாயை வாக்கிங் அழைத்து செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்..!

  சரியான நேரத்தை திட்டமிடுதல் : கடுமையான வெப்ப தாக்கத்தைத் தவிர்ப்பதற்கும், உங்கள் செல்ல நண்பரைப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வைத்திருக்கவும், கோடையில் நீங்கள் உங்கள் நாயுடன் வாக்கிங் செல்லும் நேரத்தைக் கணக்கிடுவது முக்கியம். வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தைத் தவிர்த்து, அதிகாலை அல்லது மாலை தாமதமாக வாக்கிங் செல்ல நீங்கள் திட்டமிடலாம். இது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்கள் செல்லப் பிராணிக்கு சற்று நிவாரணம் அளிக்கும். மேலும், அதிக வெப்பம் அல்லது நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. வாக்கிங் செல்லும் நேரத்தை புத்திசாலித்தனமாக திட்டமிடுவதன் மூலம், உங்கள் வாலாட்டும் நண்பருக்கு அசௌகரியமாக உணராமல் சுற்றுச்சூலழை அனுபவிக்க பக்க பலமாக இருக்கலாம்.

  MORE
  GALLERIES