உடல் எடையை குறைப்பது மற்றும் ஃபிட்டான உடல் அமைப்பை பெறுவது ஆகியவை உடற்பயிற்சியை மேற்கொள்ளும் நபர்களிடையே மிகவும் பொதுவான இரண்டு உடற்பயிற்சி இலக்குகளாக இருக்கின்றன. மேலும் அவர்கள் செய்யும் ஒட்டுமொத்த உடற்பயிற்சிக்கான முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு, எடை இயந்திரத்தில் உடல் எடையை சரிபார்ப்பது மற்றும் நாடாவைப் பயன்படுத்தி உடலின் சுற்றளவை மதிப்பிடுவார்கள். ஆனால் உங்கள் உடற்பயிற்சிகளின் செயல்திறனை உடல் அழகியல் மாற்றங்களை வைத்து மட்டுமே தீர்மானிக்கக்கூடாது. தவறாமல் ஒருவர் உடற்பயிற்சி செய்வதால் அவர்களுக்கு உடலமைப்பை தாண்டி ஆரோக்கியம் சார்ந்த வகையில் பல நன்மைகள் கிடைக்கின்றன. உடற்பயிற்சி செய்யும் போது உடல் எடையில் சில மாற்றங்களை நாம் தெளிவாக காணலாம். இருப்பினும் சில முன்னேற்றங்களை உணர மட்டுமே முடியும். பொதுவாக உடல் மாற்றங்கள் தோன்றுவதற்கு சில காலம் எடுக்கலாம். இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் விரக்தியில் உடற்பயிற்சியை கைவிடுகிறார்கள். என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடையில் சில மாற்றங்களை தாமதமாக காண நேரிடும். இருப்பினும் சில உடல் அல்லாத முன்னேற்றங்களை ஆரம்ப காலத்தில் இருந்தே நீங்கள் உணர முடியும். அவற்றை பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பலமாக உணருவீர்கள்: உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் உடனடியாக உடல் எடையை குறைக்கவோ அல்லது வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவோ முடியாது. ஆனால் நீங்கள் மிக வலுவாக இருப்பதை உணருவீர்கள். மேலும் ஆரோக்கியமாக உணருவீர்கள். இதனால் உங்களால் உங்களது அன்றாட பணிகளை மிக எளிதாக செய்ய முடியும். மேலும், நீங்கள் தினமும் வொர்க்அவுட்டை செய்ய வேண்டும் என்ற பாசிட்டிவ் எண்ணத்தை பெறலாம். நாள் முழுவதும் நீங்கள் சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. மேலும் நீங்கள் மீண்டும் மீண்டும் உடற்பயிற்சி செய்வதன் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சிறந்த தூக்கம்: உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கிறது மற்றும் நல்ல மனநிலையை அதிகரிக்க உதவுகிறது. இது இரவில் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களும் தவறாமல் உடற்பயிற்சி செய்வதால் பயனடையலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உங்கள் மனதைக் அமைதிப்படுத்துவதன் மூலம் இரவில் எழுந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறையலாம். இரவில் சிறந்த தூக்கத்திற்கு, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது சிறந்ததாக இருக்கும். அதுவே இரவில் தாமதமாக உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் மூளை அப்போது சுறுசுறுப்பாக இருக்கும். இதனால் இரவில் நீங்கள் தூங்குவது கடினமாக இருக்கும்.
குறைந்த அளவு மன அழுத்தம் : உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் விரும்பினால் உடற்பயிற்சியை விட சிறந்த செயல்பாடு எதுவும் இல்லை. கார்டிசோல் மற்றும் எபினெஃப்ரின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்க வழக்கமான உடற்பயிற்சி உதவுகிறது. இதன் காரணமாக ஒருவர் சிறப்பாக கவனம் செலுத்தவும், செயல்திறனை அதிகரிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்திறனை அதிகரிக்கவும் முடியும்.
நல்ல உடல்நிலையை உணருவீர்கள்: உடற்பயிற்சி செய்யும்போது உடனேயே உடல் மாற்றங்கள் தெரியாமல் போகலாம். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது தானாகவே நன்றாக உணருவீர்கள். நீங்கள் வழக்கமான செயல்களை பின்பற்றும்போது உங்கள் உடல்நிலை மேம்படும். இது நீரிழிவு நோயின் அறிகுறிகளைக் குறைக்கவும், உங்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், உங்கள் கொழுப்பின் அளவை நிர்வகிக்கவும் உடற்பயிற்சி உதவும். எனவே நீங்கள் ஆரோக்கியமாக உணருவீர்கள்.
உங்கள் பாலியல் வாழ்க்கை மேம்படும்: நீங்கள் சமீபத்தில் மிகவும் சோர்வாக உணர்ந்திருந்தால் அல்லது உங்கள் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தால் உடற்பயிற்சி செய்வது இந்த விஷயத்திற்கு உதவும். வழக்கமான உடல் செயல்பாடு ஆற்றல் அளவை மேம்படுத்தலாம். எனவே இது உங்கள் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக உதவக்கூடும். இதுதவிர, தவறாமல் உடற்பயிற்சி செய்வது விறைப்புத்தன்மையின் சிக்கலைக் குறைக்கும்.