வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மனிதர்களின் பொழுதுபோக்காகவும், மனநலத்தை மேம்படுத்தும் உளவியல் ஆலோசனையாகவும் பார்க்கப்படுகிறது. பூனை பறவை இடங்கள் என பல்வேறு செல்லப்பிராணிகள் இருந்தாலும் மனிதர்களிடத்தில் மிகவும் நெருக்கமாக இருப்பது நாய்தான். நாய்கள் மனிதனுடைய மனம் கவர்ந்த செல்லப் பிராணி. மனிதன் முதலில் பழக்கப்படுத்திய விலங்கு நாய். அதனால், வீடுகளில் தொடங்கி, தோட்டங்கள் வரை நாய்களை செல்லப் பிராணியாகவும், காவலுக்கும் வளர்க்கின்றனர்.
நாய்கள் பெரும்பாலும் மனிதனின் சிறந்த நண்பன் என்றும் குறிப்பிடப்படுகின்றன. நாய் ஒருவரை மிகவும் மகிழ்ச்சியாக உணர வைக்கும். உங்களின் நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் உங்கள் அருகில் ஒரு சிறந்த நண்பர் இருப்பதைப் போன்ற உணர்வைத் தரும். நாய்கள் விசுவாசமான, அன்பான தோழர்கள் மட்டுமல்ல, அவற்றால் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்க முடியும். நாய் வளர்ப்பதால் ஏற்படும் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மன ஆரோக்கியம் மேம்படும் : ஒரு நாய் வைத்திருப்பது உங்கள் மன ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்த உதவும். செல்லப்பிராணிகளை வைத்திருக்காதவர்களை விட, செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாய்கள் தனியாக வாழ்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு நாயுடன் நேரத்தை செலவிடுவது தனிமை மற்றும் மனச்சோர்வின் உணர்வுகளை குறைக்க உதவும்.
சுறுசுறுப்பாக இருக்க உதவும் : நாய் வைத்திருப்பதன் மூலம் நீங்கள் அன்றாட வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்பதை உணர்வீர்கள். தினமும் நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும், இது தினசரி உடலின் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது. உங்கள் நாயுடன் விளையாடுவது சுறுசுறுப்பாக இருக்கவும், உடலின் கலோரிகளை எரிக்கவும் உதவும். உங்கள் நாயுடன் நடப்பது உங்களுடன் எப்போதும் ஒரு பிணைப்புடன் இருக்க உதவும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : நாய் உரிமையாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு குறைந்த அளவு மன அழுத்தத்தைக் கொண்டிருப்பதே இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் நாய் வளர்ப்பவர்கள் தினமும் அதற்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி வைக்கின்றனர். அவ்வாறு செய்வதால் அவர்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு குறைய வாய்ப்புள்ளது.
சமூக தொடர்புகள் மேம்படும் : நாய் வளர்ப்பவர்கள் புதிய நபர்களைச் சந்திக்க உங்களுக்கு உதவும். உங்கள் நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது மற்ற நாய் உரிமையாளர்களைச் சந்தித்து உரையாடலைத் தொடங்க உங்களுக்கு வாய்ப்பளிக்கும். இது உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், ஏனெனில் நீங்கள் சந்திக்கும் புதிய நபர்களால் மகிழ்ச்சியடையக்கூடும்.