மது அருந்தினால் உடலுறவில் ஈடுபாடு அதிகரிக்கும் என கருதி பலரும் இந்த தவறான செயலை செய்ய முயல்கின்றனர். ஆனால் இது ஆபத்தான செயல் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மது அருந்திய பின் உடலுறவு என்பது உங்களை படுக்கையில் செயலற்றவராக மாற்றும் என்பதே உண்மை. எப்படி தெரியுமா..? இந்த 5 விஷயங்களை கவனியுங்கள்.
தற்காலிக ஆண்குறி விறைப்பு செயலிழப்பு : ஆய்வுகளின்படி அதிகப்படியான ஆல்கஹால் நுகர்வு மூளையின் செயலை பாதிக்கும். அதேசமயம் உங்கள் ஆண்குறி செயல்பாட்டையும் பாதிக்கும். காரணம் இந்த சமயத்தில் ஆண்குறிக்கான இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுப்படி போதையில் இருக்கும் ஆண்களுக்கு விறைப்பு செயலிழப்பு பாதிப்பு இருக்கும் என்றும், அதற்கு ஆல்கஹால் நுகர்வுதான் காரணம் என்றும் கூறுகிறது.
வறட்சியடையும் வஜைனா : ஆல்கஹால் நுகர்வு பாலியல் உணர்ச்சியை தூண்டலாம் ஆனால் அது உங்கள் பாலியல் செயல்பாட்டை முழுமையாக்காது என்பதே உண்மை. காரணம் மது அருந்திய பின் உடலுக்கும் , மூளைக்குமான தொடர்பு குறைந்துவிடும். இதனால் பிறப்புறுப்பு செயல்பாடுகளும் தடைபடும். நீங்கள் மது அருந்திய பின்புதான் செக்ஸில் நீண்ட நேரம் ஈடுபட முடிகிறது என்று நினைத்தால் அது தவறு. அவ்வாறு இருக்க காரணம் உங்கள் பிறப்புறுப்பு செயலற்று இருப்பதே அதற்கு காரணம். அதேசமயம் மதுவினால் வஜைனாவின் வழவழப்புத் தன்மை குறையும். இதனால் உங்கள் புணர்ச்சி வலி மிக்கதாக இருக்கும். இது உங்கள் செக்ஸ் மூடை அசௌகரியமானதாக மாற்றிவிடும்.
மனச்சோர்வும் காரணமாகலாம் : மது அருந்துவதால் உடலில் சுரக்கும் ஆக்ஸிடாக்ஸின் என்னும் ஹாப்பி ஹார்மோன் தடைபடும். இதனால் நீங்கள் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி மனச்சோர்வுடன் இருப்பீர்கள். இந்த சமயத்தில் உடலுறவில் ஈடுபடும்போது நீங்கள் ஃபோர்ப்ளேவில் மட்டும் ஈடுபட்டு சோர்வடைந்துவிடுவீர்கள். இதனால் நீங்கள் உங்கள் துணையையும் சங்கடத்தில் ஆழ்த்தி நீங்களும் முழுமையான திருப்தியை அடைய முடியாமல் போகும்.
உச்சக்கட்ட நிலை இல்லாமல் போகும் : நீங்கள் மது அருந்திவிட்டு நல்ல போதையில் இருக்கும்போது உச்சக்கட்ட நிலையை அடைய முடியாமல் போகும். காரணம் மது அருந்தியிருப்பதால் உங்களுக்கும் துணைக்கும் தொடர்புநிலை இல்லாமல் போகும். அதாவது உடலுறவின் போது உணர்ச்சியை தூண்டும் செக்ஸ் பேச்சுகள் , லவ் டாக்ஸ் இருக்காது. அதோடு பிறப்புறுப்பின் இரத்த ஓட்ட தடைபாடும் இருப்பதால் இவை அனைத்தும் உங்கள் உடலுறவு இன்பத்தை பாதிக்கும்.
மயங்கும் மனநிலை : மது அருந்திய பின் நம் மனதளவிலும், உடலளவிலும் தடுமாற்றம் இருக்கும். இந்த சமயத்தில் யாரை பார்த்தாலும் ஈர்ப்பு உண்டாகும். காம உணர்ச்சி தூண்டும். இந்த சமயத்தில் பிற பெண்களுடன் செக்ஸ் உறவுகூட தவறாக தெரியாது. இப்படி பல சமயங்களில் நடக்கும் கேசுவல் செக்ஸில் ஈடுபட்டு போதை தெளிந்ததும் குற்ற உணர்ச்சிக்கு ஆளானோர் பலர் உள்ளனர். எனவே அதிகப்படியான மது என்பது ஆண் , பெண் இருவருக்கும் பாலியல் ஆபத்துகளிலும் சிக்க வைக்கும்.
பாலியல் தொற்றுக்கு வழி வகுக்கும் : மது முடிவெடுப்பதில் உங்களை தடுமாற வைக்கும். அந்த சமயத்தில் தெரியாத பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ உடலுறவில் ஈடுபட முடிவெடுப்பது பாதுகாப்பற்றதாகும். இந்த செயல் உங்களுக்கு பாலியல் தொற்றை உண்டாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும். பாதுகாப்பற்ற உறவு கர்ப்பத்தை கூட உண்டாக்கலாம்.