பெரும்பாலான மக்கள், தத்தம் மூட்டு வலியை சரி செய்ய அல்லது சிகிச்சையளிக்க பல்வேறு உடற்பயிற்சிகள், மருந்துகள் மற்றும் ஆயின்மென்ட்டுகளை முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், அவைகள் தற்காலிகமான நன்மைகளையே வழங்குகின்றன. இந்த இடத்தில் தான் நீண்ட கால நன்மைகளை வழங்கும் வழிமுறைகளை நாம் ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது, குறிப்பாக - இயற்கையான வழிமுறைகள்!
எப்போதும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் : ஒருவரின் உடல் எடை தான் அவரது மூட்டுகளில் குறிப்பாக முழங்கால்கள், இடுப்பு மற்றும் பாதங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் தான், ஒருவர் எப்போதுமே ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்; உடல் இயக்கத்தை அதிகரிக்க வேண்டும் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
மஞ்சளை பயன்படுத்தலாம் : மஞ்சள் - ஒரு மந்திரப் பொருளாகும், இது உடல் வலியை மட்டுமின்றி, மன அழுத்தம் மற்றும் உடலின் பிற நோய்களைப் போக்கவும் உதவுகிறது. மஞ்சளில் 'குர்குமின்' என்கிற வேதிப்பொருள் உள்ளது, இது ஆன்டி-இன்ஃப்ளேமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. ஆக, மஞ்சள் ஒரு உன்னதமான வலி நிவாரணி ஆகும். வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து தூங்கும் முன் சாப்பிடவும், அது உடனடி நிவாரணம் அளிப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.
மசாஜ் செய்யலாம் : மசாஜ் செய்வது - வலியை சரி செய்வதற்கு மட்டுமல்ல, முழு உடலுக்கும் நல்லது. இது உடலை ரிலாக்ஸ் செய்து உங்களை 'லைட்' ஆக உணர வைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக மசாஜ் செய்வதால் உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது; எனவே, வலி நிவாரணம் வழங்க இது ஒரு நிரூபிக்கப்பட்ட முறை என்றே கூறலாம். கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒரு எண்ணெயை எடுத்து, சிறிது சூடாக்கி, பின் வலி உள்ள இடத்தில் லேசாக மசாஜ் செய்யவும். குறிப்பிட்ட பகுதியை உங்கள் விரல்களால் மிதமாக அழுத்தவும். இப்படியாக நீங்கள் மசாஜ் செய்யும்போது வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெறுவீர்கள்.