PCOS சிக்கல் கொண்ட பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் பருமன், மனநிலை மாற்றங்கள், இடுப்பு வலி, முடி உதிர்தல், மலட்டுத்தன்மை போன்ற பல அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். அதே போல PCOS சிக்கல் கொண்ட பெண்களுக்கு இதய நோய், நீரிழிவு, எண்டோமெட்ரியல் புற்றுநோய் போன்றவற்றின் ஆபத்தும் அதிகம். PCOS கொண்ட எல்லாபெண்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருக்காது. வயது மற்றும் பல வாழ்க்கை காரணிகளுக்கு ஏற்ப மாறும். PCOS-ஐ நிர்வகிக்க உதவும் 5 முக்கிய வாழ்க்கை முறை மாற்றங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சரியாக சாப்பிடுவது: இது எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதை பற்றி மட்டுமல்லாமல் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை பற்றியது. ஆரோக்கியமான, தாவர அடிப்படையிலான மற்றும் நீர் நிறைந்த உணவை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுவது PCOS-விற்கு எதிராக போராட சிறந்த வழியாகும். உடலில் இருந்து வழக்கமாக நச்சுக்களை நீக்குவதும் அவசியம். இதற்காக ஆவி பிடிப்பது, ஸ்டீம் பாத், பெருங்குடல் சிகிச்சைகள் உள்ளிட்ட முறைகளை பின்பற்றலாம்.
தினமும் ஆக்டிவாக இருப்பது: சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை PCOS-க்கு எதிராக சிறந்த பலன்களை அளிக்கும். தினசரி உடற்பயிற்சி அல்லது யோகா செய்யும் பழக்கம் கொழுப்பை குறைக்க, மனநிலையை மேம்படுத்த மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. எனினும் இது போதாது. ஒரு நாளைக்கு சுமார் 8 மணி நேரம் உடல் இயக்கத்தில் இருப்பதை பெண்கள் உறுதிப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி, வீட்டு வேலைகள் தவிர படிக்கட்டுகளில் ஏறுவது, உடலை அவ்வப்போது ஸ்ட்ரெச் செய்வது என உடலை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இயங்கி கொண்டே இருக்க பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்.
நல்ல தூக்கம்: இரவு நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் இருக்கும் போது உடல் தரமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. ஒழுங்கற்ற தூக்கம் மற்றும் கானல் ஏற்படும் எனர்ஜி இழப்பு PCOS-ஐ தூண்டுகிறது. எனவே PCOS உள்ள பெண்களுக்கு நல்ல தரமான தூக்கம் தேவைப்படுகிறது. சிறந்த தூக்கம்நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி இந்த சிக்கலுக்கு எதிர்க்க உடலை போராட வைக்கிறது.
மன நிம்மதி: பெண்கள் பொதுவாகவே அதிக சிந்திக்க கூடியவர்கள். மன அழுத்தம் PCOS சிக்கலை மேலும் சிக்கலாக்கும். எனவே மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்வது PCOS கொண்ட பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. PCOS பிரச்சனையை நினைத்து கவலை கொள்ளாமல் அதை சமாளிப்பது எப்படி என்பதில் கவனத்தை திசை திருப்பி மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்ள வேண்டும்.