செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டாலே பண்டிகை நாட்களுக்கும், விசேஷங்களுக்கும் பஞ்சமிருக்காது. திருமண கொண்டாட்டங்கள், தீபாவளி, வினாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து பண்டிகைகள் வந்துகொண்டிருக்கும். இதுபோன்ற சமயங்களில் மக்கள் கூடலாம். உறவினர்களை சந்திக்கலாம். இதுபோன்ற சமயங்களில் நாம் கொரோனா நெருக்கடியில் இருக்கிறோம் என்பது சற்றும் மறந்துவிடக் கூடாது. எப்போதும் நாம் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன பார்க்கலாம்.
அவசர தேவைக்கு உதவும் மருத்துவ சாதனங்கள் : வெப்பமானி, சர்க்கரை அளவை கண்டறியும் குளுக்கோஸ் மீட்டர், ஆக்ஸி மீட்டர் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பது இன்றியமையாதது. எல்லாவற்றிற்கும் மேலாக, வெப்பநிலை சோதனை என்பது கோவிட் -19 க்கு மட்டுமல்லாமல் வேறு எந்த நோய்களுக்கும் உதவும். குறிப்பாக கோவிட் -19 சமயத்தில் இதய துடிப்பை கண்டறிய, சுவாசத்தை கண்டறிய ஆக்ஸி மீட்டர் பயன்படுத்துவது அவசியம்.
உயர்தர மாஸ்க் : வைரஸுக்கு எதிரான முதல் பாதுகாப்பு மாஸ்க். ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுவாசத் துளிகள் பரவுவதைத் தடுக்கும் திறன் மற்றும் அதன் மூலம் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது என மாஸ்க் நமக்கு பல வகைகளில் நன்மை தரக்கூடியது. முகக்கவசங்கள் வரவிருக்கும் கொண்டாட்டங்கள் , பண்டிகை நாட்கள் கருதி வீட்டுக்குள் கூட மாஸ்க் அணிந்துகொள்வது நல்லது. நான்கு அடுக்கு மாஸ்க் அல்லது உயர்தர எஸ்எம்எஸ்-மெட்டீரியல் மாஸ்க் தொற்றை தவிர்க்க சிறப்பாக இருக்கும். இவை நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் அசௌகரியம் தராது.
ஊட்டச்சத்தில் கவனம் : நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த, பல்வேறு ஊட்டச்சத்து உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ், மல்டிவைட்டமின்கள் அவசியம். குறிப்பாக வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் டி, ஒமேகா 3, ஸிங்க், இரும்புச் சத்து , கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்களை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது உணவின் மூலமாகவோ அல்லது மருத்துவர் பரிந்துரைத்த சப்ளிமெண்டுகள் மூலமாகவோ எடுத்துக்கொள்ளுங்கள்.
வைட்டமின் டி பற்றாக்குறை சுவாசப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது. வைட்டமின் சி நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும். வெள்ளை இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். இதேபோல், ஸிங்க் மற்றும் ஒமேகா 3 அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்திற்கு முக்கியமானதாகும். எதுவயினும் உங்கள் மருத்துவரிடம் ஒரு முறை கலந்து ஆலோசிப்பது அவசியம்.
நீராவிகள்/ஆவியாக்கிகள் : கொரோனா வைரஸை குணப்படுத்துவதில் நீராவி பிடிப்பது பெரிய அளவில் கைக்கொடுக்காது என்றாலும் , அடிக்கடி ஜலதோஷம், மூக்கு அடைப்பு, காற்றுப்பாதையில் அடைப்பு மற்றும் இதர சுவாச நிலைகளுக்கு வீட்டு மருந்தாக பயன்படுத்தலாம். கோவிட் சமயத்தில் நாசிப் பாதைகள் மற்றும் சுவாச காற்றுப்பாதைகளில் ஏற்படும் அடைப்பு, சுவாசப் பயிற்சிக்கு உதவும். இனி வருவது மழைக்காலம் என்பதால் சளி, காய்ச்சல் நேரத்திலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் : ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டை கொரோனா இரண்டாவது அலையில் பலரும் எதிர்கொண்டனர். இந்த நிலைமையை தவிர்க்க அவசர உதவிக்கு ஆக்ஸிஜன் செரிவூட்டிகளை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. இவை வீடுகளில் பயன்படுத்துவது போன்றும் எளிமையான செயல்முறைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். முக்கியமாக, சிஓபிடி மற்றும் ஆஸ்துமா போன்ற பிற சுவாசக் கோளாறுகளுக்கும் அவை பயனுள்ளதாக இருக்கும்.