கோவிட்-19 உலகில் காலடி எடுத்து வைத்த பிறகு நோய் தொற்றுகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்க மற்றும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டடாயமாக உள்ளது. எனவே உணவு பழக்கவழக்கத்தில் அலட்சியம் காட்டாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கிய உணவுகளை எடுத்து கொள்வது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் முக்கிய உணவு பொருட்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பீனட் பட்டர்: கெட்ட கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பீனட் பட்டர் உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது மற்றும் உடலி சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. குறைந்த கார்போஹைட்ரேட் உணவை தேடுவோருக்கு பீனட் பட்டர் சிறந்தது. ஏனென்றால் இதில் 20% கார்போ மட்டுமே உள்ளது. இதில் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் உள்ளது. இதய செயல்பாட்டை அதிகரிக்கும். சைவம் அல்லது தாவர அடிப்படையிலான டயட்டை பின்பற்றுபவர்கள் மிதமாளவில் இடத்தி சேர்த்து கொள்வது நன்மை தரும். தவிர பீனட் பட்டரி லினோலிக் ஆசிட் உள்ளது. இது பெரும்பாலான தாவர எண்ணெய்களில் காணப்படும் முக்கிய ஒமேகா-6 கொழுப்பு அமிலம் (omega-6 fatty acid) ஆகும்.
அதிக புரோட்டீன் (Whey protein): Whey protein-ஐ நீங்கள் தேர்வு செய்தால் நீங்கள் வாங்கும் போது அது கலப்படம் அல்லது வேறு பொருட்களின் சேர்க்கைகள் இல்லாத உண்மையான தயாரிப்பா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இது உடற்பயிற்சி செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் ஸ்டாமினாவை அதிகரிக்கிறது. எடை இழப்பு மற்றும் வலிமையை மேம்படுத்த உதவுகிறது.
ஆப்பிள் சிடர் வினிகர்: பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் குவாலிட்டி உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது ஆப்பிள் சிடர் வினிகர். மேலும் எடை மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது. மேலும் இது வளர்சிதை மாற்றம், நச்சு நீக்கம், ரத்த சிவப்பணு உற்பத்தி மற்றும் செரிமானம் உள்ளிட்டவற்றுக்கு உதவுகிறது.
மல்டி வைட்டமின்ஸ்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் பல நோய்களுக்கு எதிராக உடலைபாதுகாக்க மல்டி வைட்டமின்கள் அவசியம். மல்டி-வைட்டமின்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் உடல் பலவீனத்தை குறைக்கவும் உதவுகின்றன. மேலும் பவர், எனர்ஜி மற்றும் உடலில் மினரல் அளவுகளை மேம்படுத்த மற்றும் தசைகளை வலுப்படுத்த மல்டி-வைட்டமின்கள் உதவுகின்றன.