முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

சுவாச அமைப்பு தொடர்பான நோய்களுக்கான ஆயுர்வேத மருந்துகளின் ஒரு பகுதியாக திப்பிலி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

  • 18

    சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

    தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுக்கு மத்தியில் நம்முடைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் நமது சுவாச ஆரோக்கியம் கடுமையான ஆபத்தை சந்திக்க நேரிடுகிறது. நம்முடைய சுவாச ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நுரையீரல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 28

    சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

    நமது நுரையீரல் பல நோய் தொற்றுகள், மாசுபடுத்திகள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நுரையீரல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் ஆஸ்துமா, நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பல சுவாச தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கிறது.

    MORE
    GALLERIES

  • 38

    சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

    எனவே சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த, நுரையீரலை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைக்க முக்கிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். நம்முடைய சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பல ஹெர்பல்கள் இருக்கின்றன. சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 மூலிகைகள் இங்கே:

    MORE
    GALLERIES

  • 48

    சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

    இஞ்சி : பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள இஞ்சி பல நூற்றாண்டுகளாக நம் அனைவரது வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் அற்புத மூலிகையாகும். அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ள இஞ்சி சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. தவிர சுவாச தொற்றுகள் மற்றும் அலர்ஜிகளுக்கு ஒரு பயனுள்ள தீர்வாகவும் இருக்கிறது. சளியை தளர்த்த மற்றும் சளியை எளிதாக வெளியேற்ற உதவும் தன்மை இஞ்சியில் இருக்கிறது. இஞ்சி டீ அல்லது இஞ்சி சப்ளிமெண்ட்ஸ் உள்ளிட்ட பல வடிவங்களில் இஞ்சியை நாம் எடுத்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 58

    சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

    பெப்பர்மின்ட் : பச்சை புதினா மற்றும் நீர் புதினா ஆகியவற்றின் கலப்பின தாவரம் மூலிகை தான் இந்த மிளகுக்கீரை எனப்படும் பெப்பர்மின்ட். புத்துணர்ச்சியூட்டும் மூலிகையான இது சுவாச மண்டல பாதிப்பை சரி செய்யும் திறனுக்காக அறியப்படுகிறது. இதில் இருக்கும் menthol கூலிங் எஃபெக்டை கொண்டுள்ளது. இது வீக்கத்தை குறைக்க மற்றும் சுவாச பாதைகளை கிளியராக வைக்க உதவும். தவிர ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சைனசிடிஸ் உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளுக்கு பெப்பர்மின்ட் சிறந்த தீர்வாகும். பெப்பர்மின்ட் டீ அல்லது டிஃப்பியூசரில் பெப்பர்மின்ட் எசென்ஷியல் ஆயிலை பயன்படுத்துவது உட்பட பல வழிகளில் இந்த மூலிகையை பயன்படுத்தலாம்.

    MORE
    GALLERIES

  • 68

    சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

    மஞ்சள் : சிறப்பான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் பாரம்பரிய மருத்துவத்தில் மஞ்சள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் உள்ள கர்குமின் காம்பவுண்ட் அழற்சி எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் பண்புகள் சுவாச அமைப்பில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் அலர்ஜி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த தீர்வாகும். பாலில் கலந்து குடிப்பது, மசாலாக்களில் கலப்பது மற்றும் சப்ளிமெண்ட் உள்ளிட்ட பல வழிகளில் மஞ்சளை சேர்த்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 78

    சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

    துளசி : அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஜிங்க் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட பலவற்றை கொண்டுள்ள துளசி இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் துளசி பிரபல ஆயுர்வேத மூலிகையாக இருக்கிறது. சுவாச ஆரோக்கியத்தை வலுப்படுத்த மற்றும் தொற்றுகளுக்கு எதிராக போராட துளசி பெரிதும் உதவுகிறது. நுரையீரல் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதிலும் துளசி முக்கிய பங்கு வகிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 88

    சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல்..!

    திப்பிலி : பொதுவாக நம் வீட்டு கிச்சன்களில் மசாலாப் பொருளாக பயன்படுத்தப்படும் திப்பிலியானது சளி மற்றும் இருமலுக்கு நிவாரணமளிப்பதில் மிக பயனுள்ளதாக இருக்கிறது. சுவாச அமைப்பு தொடர்பான நோய்களுக்கான ஆயுர்வேத மருந்துகளின் ஒரு பகுதியாக திப்பிலி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்துமா எதிர்ப்பு பண்பு கொண்ட சில கலவைகள் திப்பிலியில் உள்ளன. சுவாசக் குழாயில் இருந்து சளி படிவுகளை அகற்ற உதவுகிறது மற்றும் இதில் தொற்று எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. தேனுடன் திப்பிலி பவுடரை கலந்து சாப்பிடுவது அழற்சி எதிர்ப்பு மற்றும் சுவாச தொற்றுகளை தடுப்பதற்கான பாரம்பரிய வீட்டு வைத்தியமாக இருக்கிறது.

    MORE
    GALLERIES