இந்த குளிர்காலத்தில் உங்களை சூடாக வைத்திருக்க உதவும் ஹெல்தி டிரிங்ஸ்
நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை பூஸ்ட் செய்யக்கூடிய உணவுகளையும் பானங்களையும் சாப்பிடுவது அவசியம்.
Web Desk | January 19, 2021, 7:20 PM IST
1/ 9
குளிர்காலம் வந்தால் கூடவே இருமல், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களும் அதிகரிக்க ஆரம்பித்து விடும். எனவே நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை பூஸ்ட் செய்யக்கூடிய உணவுகளையும் பானங்களையும் சாப்பிடுவது அவசியம். குளிர்காலத்தில், நம்மில் பலர் ஒரு கப் டீ, காபி அல்லது ஒரு கிளாஸ் சூடான பாலையாவது கட்டாயம் குடிக்க விரும்புவோம். எப்போதாவது, ஒரு கப் சூடான லீக்விட் சாக்லேட்டையும் சிலர் குடிப்பதுண்டு. குளிர்காலத்தில் நம் உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும் சில அற்புதமான ஆரோக்கிய பானங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.,
2/ 9
லெமன் மற்றும் இஞ்சி டீ : காலையிலும் மாலை வேளையிலும் ஒரு சூடான கப் டீ பலருக்கும் அவசியம், டீ இல்லையென்றால் பலருக்கு பொழுதே போகாது. குறிப்பாக பெரும்பாலான இந்திய வீடுகளில் குளிர்காலத்தில் டீக்கு பஞ்சம் இருக்காது. லெமன் மற்றும் இஞ்சி சாற்றில் தயாரிக்கப்பட்ட மூலிகை டீ சுவைக்கு மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் குளிர்காலத்தில் பொதுவாக காணப்படும் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது.
3/ 9
இதேபோல், ஜலதோஷம் மற்றும் அழற்சியின் தீர்வாக இஞ்சி எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பொருட்களாகும். எனவே இந்த இரண்டு பொருட்களையும் கொண்டு டீ தயாரித்து ஒருவர் குடித்து வந்தால், நோய்க்கிருமிகளிடமிருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் உடல் நலம் சரியில்லாத ஒருவர் இந்த டீயை ஒரு நாளைக்கு 1-2 கப் குடித்து வந்தால், விரைவில் உடல்நலம் குணமாகும்.
4/ 9
இலவங்கப்பட்டை, ஆப்பிள் ஸ்மூத்தி : ஆப்பிள்களில் வைட்டமின் C நிறைந்துள்ளது, இது குளிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. குளிர்ந்த வானிலை வயிற்று பிரச்சனைகளை அதிகரிக்கும். ஆப்பிள்களில் உள்ள பாலிபினால்கள் வயிற்று வீக்கம் மற்றும் சிக்கல்களை குறைக்க உதவுகின்றன. இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளையும் கொண்டுள்ளது. ஆப்பிள் மிருதுவாக்கியுடன் இலவங்கப்பட்டை மசாலா-இனிப்பு சுவையுடன் கூடுதல் நன்மையை அளிக்கிறது.
5/ 9
பாதாம் பால் : குளிர்ந்த இடம் நமது நோயெதிர்ப்பு அமைப்புகளை பலவீனப்படுத்துகின்றன. பாதாம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பாதாம் பால் நமக்கு வைட்டமின் E சத்தை அளிக்கிறது, இது நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுநோய்களுக்கு எதிராக நம்மை போராட உத்வேகமளிக்கிறது. பாதாம் பாலில் உள்ள வைட்டமின் D நம் உடலில் உள்ள கால்சியத்தையும் எலும்பு ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.
6/ 9
பாதாம் பாலில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், ஜின்க் மற்றும் மாங்கனீசு ஆகியவை அதிக அளவு காணப்படுகிறது. லாக்டோஸ் (lactose) பிடிக்காதவர்களுக்கு இந்த பானம் நல்லது. பாதாம் பாலில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின் போன்ற தசைகளை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கிறது. எனவே இந்த குளிர்காலத்தில் நல்ல கட்டுக்கோப்பான உடலைப் பெற நினைத்தால், பாதாம் பாலை அருந்தி உடற்பயிற்சி செய்யுங்கள்.
7/ 9
தேங்காய் பால் : குளிர்காலம் குறிப்பாக வயதானவர்களுக்கு ஒரு கடினமான காலமாகும். குளிர்ந்த வெப்பநிலை மூட்டுகளின் உணர்திறனை அதிகரிப்பதால் குளிர் காலநிலை மூட்டு வலியை அதிகரிக்கிறது. தேங்காயில் பாலிபினால்கள் இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, அவை ஆன்டி-ஆக்ஸிடன்ட்களாகவும் செயல்படும்.
8/ 9
மேலும் இந்த தேங்காய் பால் (Coconut Milk) கீல்வாதத்துடன் தொடர்புடைய அழற்சியைக் குறைக்கும். தேங்காய் பாலை உணவில் மட்டுமல்ல காலையில் ஜூஸ் குடிப்பது போல் தேங்காய் பாலை குடிக்கலாம். ஏனெனில் இந்த தேங்காய் பாலில் நார்ச்சத்து, வைட்டமின் C, E, B1, B3, B5, மற்றும் B6, மினரல், இரும்புச் சத்து, செலினியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறந்துள்ளன.
9/ 9
காஷ்மீர் கஹ்வா : கஹ்வா கிரீன் டீ, குங்குமப்பூ, இலவங்கப்பட்டை, ஏலக்காய் (green tea, saffron, cinnamon and cardamom) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை தேன் அல்லது பாதாமுடன் இந்த இனிப்பான டீ பரிமாறப்படுகிறது. முழு மசாலாப் பொருட்களும் இதில் தூண்டுதல்களாக செயல்படுகின்றன, மேலும் இந்த டீ குளிர்ந்த காலநிலையில் நம் உடலை கதகதப்பாக்குகின்றன.