முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்..? இந்த 5 பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்..? இந்த 5 பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

அந்த ஆன்டிபயாடிக் மாத்திரைகள் தற்காலிகமாக உங்கள் உடல் வலி, பிரச்சனைகளை சரி செய்யலாம். ஆனால் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 • 17

  ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்..? இந்த 5 பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

  சமீப நாட்களாக எந்த உடல் உபாதை வந்தாலும் உடனே ஆன்டிபயாடிக் போட்டுக்கொள்ளும் பழக்கம் அதிகரித்துவிட்டது. எனவேதான் மருத்துவர்களும் தேவையில்லாமல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை பயன்படுத்தாதீர்கள் என அடிக்கடி எச்சரிக்கின்றனர். உடல் நிலை சரியில்லை என்றாலும் வீட்டு வைத்தியங்களை நாடிய தலைமுறை போய் இன்று ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தேடும் மக்கள் கூட்டமே அதிகமாக உள்ளது. அதுவும் மருத்துவர் பரிந்துரையின்றி தாமாக மெடிக்கல் ஷாப்பில் பிரச்சனையை கூறி மாத்திரையை உட்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்..? இந்த 5 பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

  அந்த ஆன்டிபயாடிக் மாத்திரைகள் தற்காலிகமாக உங்கள் உடல் வலி, பிரச்சனைகளை சரி செய்யலாம். ஆனால் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்படி அதிகமாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொண்டால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பதை பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்..? இந்த 5 பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

  குடல் இயக்கத்தில் பாதிப்பு : உடலில் கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதுபோல் நல்ல பாக்டீரியாக்களும் உள்ளன. அவை குடல் இயத்தை பராமரித்து சீரான செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. இந்நிலையில் நீங்கள் அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொண்டால் அவை நல்ல பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். இதனால் நீங்கள் தேவையற்ற உடல் நல பாதிப்புகளை அனுபவிக்கக் கூடும்.

  MORE
  GALLERIES

 • 47

  ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்..? இந்த 5 பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

  வயிற்றுப்போக்கு : பலரும் காய்ச்சல், சளிக்கு உடனே ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரையை போட்டுவிடுவார்கள். ஆனால் அது பின் விளைவாக தேவையற்ற பக்கவிளைவுகளை உண்டாக்கலாம். குறிப்பாக பலர் வயிற்றுப்போக்கு பிரச்சனையால் பாதிகப்படுவார்கள். Centers for Disease Control and Prevention கூறும் தகவல் படி சளி மற்றும் இருமல் காரணமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கும் மருத்துவரின் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகளை கொடுக்கின்றனர். இதனால் குடல் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுவயிற்றுப்போக்கு பிரச்சனையால் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் இறப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 57

  ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்..? இந்த 5 பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

  பூஞ்சை தொற்று : ஆன்டிபயாடிக் மாத்திரை என்பது கடுமையான பாக்டீரியாக்களை அழிப்பதற்கே.. ஆனால் அது பெரும்பாலான நேரங்களில் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்தே அழிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பூஞ்சை தொற்று பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களும் அழிந்துவிடுகிறது. எனவே பூஞ்சை தொற்றுகளின் பெருக்கம் அதிகரித்து அடிக்கடி வாய், தொண்டை , காது போன்ற இடங்கள் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுகின்றன. பெண்களுக்கு வஜைனா தொற்று அதிகரிக்க காரணமாகவும் அமைகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்..? இந்த 5 பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

  மருந்துகளின் தவறான தொடர்பு : நீங்கள் மற்ற ஏதேனும் நோய் காரணமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறீர்கள் எனில் அதன் ஆற்றலை நீர்த்துப்போகச் செய்யும் தன்மை ஆன்டிபயாடிக் மாத்திரைகளுக்கு உள்ளது. அதுவும் இந்த இரு மாத்திரைகளின் கலவை தவறான எதிர்விணையை உருவாக்கி உங்களுக்கு பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 77

  ஆன்டிபயாடிக் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் என்ன ஆகும்..? இந்த 5 பாதிப்புகளை தெரிஞ்சுக்கோங்க..!

  ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு : ஆன்டிபயாடிக் மாத்திரையை அதிகமாக பயன்படுத்தினால் உடல் பாக்டீரியாக்கள் அடிக்கடி தன்னுடைய அமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கும் அல்லது சில வகையான என்சைம்களை வெளியிடும். இதனால் சில நோய் காரணங்களுக்காக முன்பு நீங்கள் பயன்படுத்திய ஆன்டிபயாடிக் மாத்திரைகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்பை உருவாக்குகிறது. உதாரணமாக நீங்கள் ஏற்கெனவே காய்ச்சல், டைஃபாய்டு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக உட்கொண்ட ஆன்டிபயாடிக் மாத்திரையின் தாக்கம் மீண்டும் அதே நோய்க்கு பயன்படுத்தும்போது இருக்காது.

  MORE
  GALLERIES