நீங்கள் தூங்கச் செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக பழங்கள் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா அல்லது அது கட்டுக்கதையா? என்ற கேள்விக்கும் இந்த செய்தியில் விடை காணலாம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைக் காட்டிலும், அதை எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதே மிக முக்கியமானது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பாலக் மிதா. தூங்குவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பாக எதையுமே சாப்பிடக் கூடாது என அறிவுறுத்துகிறார் அவர்.
ஒருவேளை தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டிய சூழலில் நீங்கள் உள்ளீர்கள் என்றால், நீங்கள் குறைவாக சாப்பிட வேண்டும் அல்லது லேசான உணவுப் பொருள்களாக இருக்க வேண்டும். உண்ணும் உணவு எளிதாக செரிமானம் அடையக் கூடியதாக இருக்க வேண்டும். தூங்குவதற்கு சற்று முன்பாக சாப்பிடும் நபர்களுக்கு உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்ந்து விடுகிறது. அதுதான் உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. வயிறு பசிக்கிறது என்றாலும், இரவில் தாமதாமாக சாப்பிடும் பழக்கம் உடையவர் என்றாலும் 8 மணிக்குப் பிறகு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவை என்னென்ன பார்க்கலாம்.