இன்றைய மோசமான வாழ்க்கை முறை உடலின் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சப்படு வருகிறது. அதில் சிறுநோரகமும் விதிவிலக்கல்ல. சிறுநீரகம் நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் வடிக்கடி எனலாம். ஆனால் குடிப்பழக்கம், உணவு முறை மூலம் அதன் ஆரோக்கியத்தை மோசமாக்கி வருகிறோம். இதனால் சிறுநீரகக் கல் தொடங்கி சிறுநீரக செயலிழப்பு வரை பல சிறுநீரக பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர். ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி மட்டும் போதாது. ஆரோக்கியமான உணவும் அவசியம். அந்த வகையில் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த உணவுகளை தினசரி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்.
அன்னாசி : அன்னாசி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது சிறுநீரக நோய்களைத் தடுக்க உதவுகிறது. இது மாங்கனீசு, வைட்டமின் சி மற்றும் ப்ரோமலின் என்ற நொதியால் நிறைந்துள்ளது. மேலும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது குறைந்த பொட்டாசியம் மாற்றாக இருக்கும்.
காலிஃபிளவர் : காலிஃபிளவரில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் ஃபைபர் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களின் ஆரோக்கியமான மூலமாக இருக்கிறது. இதனால் நச்சுகளை சுத்தம் செய்ய உடலுக்கு உதவுகிறது. காலிஃபிளவர் சாப்பிடுவது சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஏனெனில் இதில் அதிக அளவு சோடியம், பொட்டாசியம் அல்லது பாஸ்பரஸ் இல்லை. இதனால் சிறுநீரகத்தின் மீதான அழுத்தம் குறைகிறது.