முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » எலுமிச்சை, வாழைப்பழம்... மலச்சிக்கலை போக்கும் 5 வழிகள்..!

எலுமிச்சை, வாழைப்பழம்... மலச்சிக்கலை போக்கும் 5 வழிகள்..!

ஒரு சிலருக்கு காலையில் எழுந்தவுடன் சூடான காபி குடித்தால்தான் அன்றைய நாளைத் தொடங்க முடியும். காபியில் இருக்கும் காஃபின் என்ற காம்பவுண்டு மற்றும் அது அளிக்கும் எனர்ஜி மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.

 • 16

  எலுமிச்சை, வாழைப்பழம்... மலச்சிக்கலை போக்கும் 5 வழிகள்..!

  நம்ம சாப்பிடும் உணவு சரியாக செரிமானமாவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு உடலில் இருக்கும் கழிவுகள் நீங்குவதும் முக்கியம். எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். செரிமான கோளாரால் மலச்சிக்கல் ஏற்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், வேறு சில உடல் நல பிரச்சனைகள், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை கூட மலச்சிக்கலுக்கு காரணமாக அமையும். மலச்சிக்கலை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான ஐந்து எளிமையான தீர்வுகள் இங்கே.

  MORE
  GALLERIES

 • 26

  எலுமிச்சை, வாழைப்பழம்... மலச்சிக்கலை போக்கும் 5 வழிகள்..!

  நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் : உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான்! தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலில் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளுக்கும் பிரச்சனை ஏற்படும், செரிமானம் சரியாக நடைபெறாது. எனவே, நீங்கள் நாள் முழுவதும் போதிய அளவுக்கு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக மலச்சிக்கல் இருப்பவர்கள் வெதுவெதுப்பான அல்லது சூடான நீரை காலையில் எழுந்தவுடன் குடித்தால் மலச்சிக்கல்லுக்கு நல்ல நிவாரணமாக அமையும்.

  MORE
  GALLERIES

 • 36

  எலுமிச்சை, வாழைப்பழம்... மலச்சிக்கலை போக்கும் 5 வழிகள்..!

  எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறில் இருக்கும் மருத்துவ குணங்கள் மற்றும் சிட்ரிக் ஆசிட் ஆகிய இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்தி உடலில் இருக்கும் நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவும். எனவே இயற்கையாகவே மலச்சிக்கலுக்கு தீர்வாக எலுமிச்சை சாறு உதவுகிறது. காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சையை பிழிந்து அதை குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்சனைகள் சரியாவதோடு, மலச்சிக்கலுக்கு நிவாரணமாக அமையும்.

  MORE
  GALLERIES

 • 46

  எலுமிச்சை, வாழைப்பழம்... மலச்சிக்கலை போக்கும் 5 வழிகள்..!

  வாழைப்பழம் சாப்பிடுங்கள் : வயிறு மந்தமாக இருக்கிறது அல்லது உப்புசமாக இருக்கிறது என்று சொன்னாலே ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள் உடனடியாக சரியாகிவிடும் என்று கூறுவார்கள். மலச்சிக்கலுக்கு உடனடியாக நிவாரணம் தேவை என்றால் நன்றாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டால் போதும். வாழைப்பழத்தில் அதிக அளவு நார்சத்து இருக்கிறது; இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைக்கு உடனடி தீர்வாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வாழைப்பழத்தில் இருக்கும் அதிக பொட்டாசியம் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

  MORE
  GALLERIES

 • 56

  எலுமிச்சை, வாழைப்பழம்... மலச்சிக்கலை போக்கும் 5 வழிகள்..!

  சூடான காஃபி : ஒரு சிலருக்கு காலையில் எழுந்தவுடன் சூடான காபி குடித்தால்தான் அன்றைய நாளைத் தொடங்க முடியும். காபியில் இருக்கும் காஃபின் என்ற காம்பவுண்டு மற்றும் அது அளிக்கும் எனர்ஜி மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. இதனால், மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், சூடான காஃபி குடிக்கலாம். செரிமான உறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து மலச்சிக்கலுக்கு நிவாரணமாகவும் இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 66

  எலுமிச்சை, வாழைப்பழம்... மலச்சிக்கலை போக்கும் 5 வழிகள்..!

  உடற்பயிற்சி செய்யலாம் : எவ்வளவு ஆரோக்கியமாக சாப்பிட்டாலும், உடலுக்கு உழைப்பே இல்லாமல் நாள் முழுவதும் அமர்ந்து கொண்டே வேலை செய்யும் நிலை பலருக்கும் இருக்கிறது. உடல் இயங்காமல் இருந்தால் உணவு சரியாக செரிமானம் ஆகாது. எனவே காலையில் நீங்கள் வயிறு மந்தமாக, உப்பசமாக அல்லது வயிறு வீங்கியது போல் காணப்பட்டால், கண்டிப்பாக மலச்சிக்கல் ஏற்படும். எனவே உங்களுடைய வயிற்றுத் தசை பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்க வயிறு சார்ந்த உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலை தடுக்கும்.

  MORE
  GALLERIES