காதுகளின் உதவியால் தான் நம்மால் அனைத்து விதமான சத்தங்களையும் கேட்க முடிகிறது. அதனால், அதனை சரிவர பராமரித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இந்தப் பராமரிப்பின் முதல் படி, நம் காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்வதே ஆகும். ஆனால், சுத்தம் செய்வது மட்டுமின்றி, நோய்த் தோற்று ஏற்படமால் பார்த்துக் கொள்வது மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வதும் காத்து பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதோடு, தேவையற்ற சத்தங்களைக் கேட்பதை சற்று குறைத்துக் கொள்வது, மற்றும் காது கேளாமை எதனால் உண்டாகிறது என்பதை அறிந்து செயல்படுவதும் முறையான பராமரிப்பின் முக்கிய பகுதியாகும்.
நம்மில் பலரும் காதுகளில் இயர் பட்ஸ் அல்லது ஹெட் போன் கொண்டு பாட்டு கேட்தை வழக்கமாக கொண்டிருப்போம். ஆனால், அதனை அதிகமாக பயனப்டுத்துவது கூட நிரந்தரமாக காது கேட்காமல் போவதற்கு வழிவகுத்துவிடலாம். எனவே, இயர் பட்ஸ் பயன்படுத்தும் போது ஒலியளவை 60%க்கும் குறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதோடு, அதனை 60 நிமிடங்களுக்குக் குறைவாக பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதே போல், மற்றவர்களிடம் இருந்து இயர் பட்ஸ் வாங்கி பயன்படுத்துவது அல்லது மற்றவர்களுக்கு நீங்கள் உங்கள் இயர் பட்ஸை கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.
காதில் அதிகப்படியான மெழுகு சேர்ந்து விடுவது முதல் காதிரைச்சல் (டின்னிடஸ்- tinnitus) வரை பெரும்பாலான காது சம்மந்தமான கோளாறுகளை காதுகளை சரியாக பராமரிப்பதன் மூலமாகவே எளிதில் தீர்க்க முடியும். படுக்கைக்கு செல்வதற்கு காதுகளில் முன் இரண்டு துளிகள் எள் எண்ணெய் விடுவது காதுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவுவதோடு காதுகளுக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.