கடைவாய் பல் நீக்கம் என்பது சாதாரணமாகிவிட்டது. சில நேரங்களில் கடைவாய் பல் முளைக்க போதுமான இடம் இல்லாதபோது அது தொந்தரவாக இருக்கும். எனவே மருத்துவர்கள் அதை நீக்கிட அறிவுறுத்துவார்கள். அதேபோல் சாப்பிடும் உணவு கடைவாய் பல்லில் சிக்கிக்கொள்ளும். அதை எடுக்க மிகவும் சிரமப்படுவார்கள். உணவுத் துகள்கள் இடுக்களில் சேர்த்து பல்லை அரிக்கவும் செய்யும். இப்படி பல காரணங்களுக்காக கடைவாய் பல்லை அகற்றிவிடுவார்கள். அப்படி அகற்றிய பின் அது பல தொந்தரவுகளை தரும். அது நீண்ட காலம் இருக்காது என்றாலும் அதன் உபாதைகளை தாங்க முடியாது. அப்படி கடைவாய் பல்லை நீக்கிய பின் வரும் பிரச்சனைகள் என்னென்ன பார்க்கலாம்.
குழி உருவாகும் : பொதுவாகவே பல் நீக்கிய பின் அந்த இடத்தில் குழி உருவாவது இயல்பு. அது இரத்த கட்டி குவிந்து குழியை மறைய வைக்கும். சில நேரங்களில் இரத்த கட்டி உருவாகாமல் போகலாம். அந்த சமயத்தில் உள்ளே உள்ள நரம்புகள் வெளியே தெரியும். உணவு துகள்கள் உள்ளே செல்லலாம். உள்ளே காற்று புகுவதால் அந்த இடம் வறட்சியாகும். பின் அது வறண்ட குழியாக மாறும். பின் அங்கு வலி ஏற்படும். துர்நாற்றம் வீசத்தொடங்கும். ஆனால் இது 3-5 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும்.
அதிக இரத்தக்கசிவு : இதை பலரும் அனுபவித்திருக்கக் கூடும். கடைவாய் பல் எடுத்ததும் அந்த இடத்தில் இரத்தம் வரும். ஆனால் அது உடனே கட்டியாக உருவாகி குழிக்குள் குவிந்துவிடும். சிலருக்கு இரத்தம் கட்டியாக உருவாக தாமதமானால் கசிவாக வெளியேறக்கூடும். அப்படி 8 முதல் 12 மணி நேரம் இரத்தக் கசிவு வருவது இயல்பானது என National Library of Medicine நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளாது.
நரம்புகளில் வலி : அறிதாகவே இந்த பிரச்சனையை அனுபவிக்க நேரிடும். கடைவாய் பல்லை நீக்கிய அதை சுற்றியுள்ள பின் முக்கோண நரம்புகள் காயமடையலாம். இந்த சமயத்தில் நாக்கு , தாடை, கீழ் உதடு, பல், ஈறுகளில் வலி இருக்கும். இது தற்காலிகமானதுதான். இருப்பினும் நரம்புகள் கடினமான பாதிக்கப்பட்டிருந்தால் தொடர்ச்சியான வலியாக மாறலாம். எனவே நரம்புகளில் ஏதும் பாதிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது நல்லது.
அருகில் உள்ள பற்களில் பாதிப்பு அல்லது தொற்று : கடைவாய் பல்லை நீக்கும்போது சில நேரங்களில் அருகில் உள்ள பற்களும் சேதாரமடையக்கூடும். குறிப்பாக பல் சொத்தை , உடைப்பு இருப்பின் கடினமாக பாதிக்கலாம். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின் அது தொற்றாக மாறலாம். தொற்றாக மாறினால் வலி, காய்ச்சல், எச்சில் சுரப்பு , மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் திரவக் கசிவு போன்றவை இருக்கும்.