ஆயுர்வேத தயாரிப்புகள் இயற்கையான பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. ஆகையால் நமக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்தவித ரசாயனங்களும் இதில் இருப்பதில்லை. குழந்தைகள் உள்பட அனைத்து வயதினர்களுக்கும் இது பயன் தரக்கூடியது. தங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு மாற்று வழி வேண்டும் என நினைக்கும் தாய்மார்களுக்கு ஆயுர்வேதப் பொருட்கள் வரப்பிரசாதமாக அமையும். டாக்டர் சுவாதி ராமமூர்த்தி, தலைமை, ஆய்வு மற்றும் வளர்ச்சி, ஹெர்பல் ஏஞ்சல் – அவர்கள் குழந்தைகளுக்கான ஆயுர்வேத தயாரிப்புகளின் ஐந்து நன்மைகளை விளக்குகிறார்.
1. பாதுகாப்பான மற்றும் இயற்கையான பொருட்கள்: ஆயுர்வேத தயாரிப்புகளை பயன்படுத்துவதால் நமக்கு கிடைக்கும் முக்கியமான நன்மை என்ன தெரியுமா? இவை இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுவதால் முற்றிலும் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது. வழக்கமாக நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருக்கும் ரசாயனங்கள் மற்றும் செயற்கை இடுபொருட்களால் நமக்கு சரும அலர்ஜி, சிராய்ப்பு, அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. அதே சமயம் மூலிகை/இயற்கை சம்மந்தமான பொருட்களை நம் உடல் எளிதாக ஏற்றுக்கொள்கிறது. இதனால் பக்க விளைவுகள் தவிர்க்கப்படுகிறது. இந்தப் பொருட்களை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது.
2. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கிறது : ஆயுர்வேதம் எப்போதுமே நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை முன்னிலைப் படுத்தும். வெறும் நோய்க்கான அறிகுறியை மட்டும் அது குணமாக்குவதில்லை. குழந்தைகளுக்கான ஆயுர்வேத தயாரிப்புகள் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. உதாரணமாக, அழற்சி நீக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் பண்புகளைக் கொண்ட மஞ்சள், இஞ்சி, துளசி இலை போன்றவை ஆயுர்வேத தயாரிப்புகளில் நிரம்பியுள்ளன.
3.சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: கற்றாழை, ரோஜா மலர், சந்தனக்கட்டை, அதிமதுரம் போன்ற பல இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான ஆயுர்வேத பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவையாவும் நம் சருமத்திற்கு மிகவும் பயனளிக்ககூடியது. இப்பொருட்கள் இயற்கையாகவே அழற்சி நீக்கியாகவும் இதம் அளிக்ககூடியதாகவும் இருப்பதால், குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். அதே போல், தலைமுடி உறுதியாகவும் நல்ல வளர்ச்சி அடையவும் ஆயுர்வேத தயாரிப்புகள் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் பொடுகு தொல்லைக்கும் நிவாரணம் அளிக்கிறது.
4.ஆயுரவேத தயாரிப்புகளின் பலதரப்பட்ட செயல்பாடுகள்: ஆயுர்வேதம் எந்த ஒன்றையும் முழுமையாகவே அணுகும். நோயின் அறிகுறியை மட்டும் தீர்த்தால் போதும் என நினைப்பதில்லை. ஆகையால் தான் ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தும் போது நமக்கு ஒரு முழுமையான தீர்வு கிடைக்கிறது. உதாரணத்திற்கு, டயாப்பர் பயன்படுத்தியதால் உங்கள் குழந்தைக்கு சிராய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். குழந்தையின் சிராய்ப்பை போக்க நீங்கள் ஆயுர்வேத கீரிமை பயன்படுத்தினால், அது சிராய்ப்பை குணப்படுத்துவதோடு சிராய்ப்பு ஏற்பட்டதற்கான காரணத்தையும் (மலம், சிறுநீர் வெளியேறுவதால் உண்டாவத) கண்டறிந்து அதையும் குணப்படுத்தும்.
5.முழுமையான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது : ஆயுர்வேத தயாரிப்புகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு முழுமையான தீர்வை வழங்குகிறது. ஆயுர்வேதத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அக்னி (நெருப்பு). இதை நமது செரிமான அமைப்பு மற்றும் மெடபாலிஸத்தோடு ஒப்பிடலாம். இதில் ஏதாவது சமநிலை பாதிக்கப்பட்டால் நம் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆயுர்வேதம் கூறுகிறது. பெரும்பாலும் அக்னியை சீர்படுத்துவதற்கு ஏற்றார்ப்போலவே ஆயுர்வேத தயாரிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக, சருமப் பராமரிப்பு பொருட்களில் கற்றாழை, அதிமதுரம், மஞ்சிஸ்தா போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை நம் சருமத்தின் மேற்பரப்பில் மட்டும் செயல்படாமல் நமது உடலின் உள்ளே சென்று மெட்டபாலிக் செயல்முறையை சீர்படுத்துகிறது. ஆயுர்வேத தயாரிப்புகளில் சேர்க்கப்படும் பொருட்களின் பட்டியல் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம், ஆனால் அதன் பயன் மற்ற ரசாயனப் பொருட்களை ஒப்பிடும்போது அதிகமாக இருக்கும்.